ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை துவையல்; இப்படி செய்து பாருங்க!
Vallarai Thuvaiyal making in tamil: வல்லாரை கீரையுடன் சம அளவு கீழா நெல்லியை அரைத்து, அதன் விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும்.
Vallarai Thuvaiyal making in tamil: வல்லாரை கீரையுடன் சம அளவு கீழா நெல்லியை அரைத்து, அதன் விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும்.
Vallarai Thuvaiyal in tamil: ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் வல்லாரை கீரைக்கு முக்கிய பங்குண்டு. இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொண்டால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறவும் உதவுகின்றன. மேலும், இருமல் மற்றும் தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும் ஒரு நல்ல மருந்தாகவும் இவை பயன்படுகின்றன.
Advertisment
வல்லாரை கீரையோடு சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் இந்த கீரையுடன், சம அளவு கீழா நெல்லியை அரைத்து, அதன் விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். பச்சையாக சாப்பிட்டால், மூளை நரம்புகள் பலம் பெறும்.
இப்படி ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியுள்ள வல்லாரை கீரையில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
வல்லாரை கீரை துவையல் செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
வல்லாரைக் கீரை – ஒரு கட்டு சின்ன வெங்காயம் – 10 கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 மிளகு – அரை டீஸ்பூன் தேங்காய் – ஒரு துண்டு தக்காளி – 2 நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
வல்லாரை கீரை துவையல் செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடலை பருப்பு, மிளகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்த வல்லாரைக் கீரை இலைகளை எடுத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். கீரை வதங்கி சுருங்கியதும் இறக்கி ஆற வைக்கவும்.
தற்போது, ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த கலவையுடன், தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
உணவுகளுக்கு ஏற்ற, சுவையான மற்றும் சத்து நிறைந்த வல்லாரைக் கீரை துவையல் தற்போது ரெடியாக இருக்கும். இவற்றை இட்லி, தோசை, பனியாரம் போன்ற உணவுகளுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“