brinjal chutney south indian style in tamil: இந்த வித்தியாசமான சட்னியை நீங்கள் நிச்சயம் முயற்சிக்கலாம். ஏனென்றால், இவை நம்முடை பிரபல காலை உணவுகளான இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
Brinjal Recipe tamil: நம்முடைய அன்றாட உணவுகளில் முக்கிய காய்கறியாக கத்தரிக்காய் உள்ளது. இந்த அற்புதமான காய்கறி நம்மில் சிலருக்கு பிடிக்காமல் இருக்கிறது. ஆனால், தெளிவான செய்முறையில் செய்தால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக மாறிவிடும்.
Advertisment
கத்தரிக்காயில் பலவகை சைடிஷ்கள், குழம்புகள் செய்து அசத்தலாம். நீங்களும் அதை முயற்சித்து அசத்தி இருப்பீர்கள். அந்த வகையில், கத்தரியில் சட்னி நம்மில் பலர் முயற்சித்திருக்க வாய்ப்பில்லை. இந்த வித்தியாசமான சட்னியை நீங்கள் நிச்சயம் முயற்சிக்கலாம். ஏனென்றால், இவை நம்முடை பிரபல காலை உணவுகளான இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
சரி, இப்போது இந்த சுவையான சட்னியை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
கத்தரிக்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1 புளி - 1 சிறிதளவு எண்ணெய் - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 3 பூண்டு - 4 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
முதலில் கத்தரிக்காய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதன் பின்னர் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.
பின்னர் அதே பாத்திரத்தில் கத்தரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
தொடர்ந்து புளியை சேர்த்து நன்கு வதக்கி கீழே இறக்கி குளிர வைக்கவும்.
இப்போது ஆறவைத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அதில் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான கத்தரிக்காய் சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“