கண் பார்வை, எலும்புக்கு உறுதி… முட்டைக்கோஸில் இவ்வளவு நன்மையா?

Amazing Benefits of eating cabbage in tamil: முட்டைகோஸில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.

cabbage benefits in tamil: how to make cabbage soup tamil

Tamil health tips: வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாக முட்டைக்கோஸ் திகழ்கிறது என்றால் நிச்சயம் மிகையாகாது. ஆயுர்வேதத்தில் அதன் பண்புகளுக்கு மிகவும் பிரபலமான இந்த அற்புத காய்கறியில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, ஈ, சி, கே, கால்சியம், இரும்பு, அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ் மற்றும் ஃபோலியேட் ஆகியவை நிரம்பி காணப்படுகின்றன.

மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த பரிசாகக் கருதப்படும் இந்த முட்டைக்கோஸ் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இப்போது அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

முட்டைக்கோஸின் அற்புத பயன்கள்

முட்டைகோஸை நாம் பச்சையாக சாப்பிடும் போது அவற்றின் அனைத்து சத்துகளும் நமக்கு கிடைக்கிறது. எனவே, இவற்றை அதிகமாக வேக வைக்காமல், அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு பயன் பெறலாம்.

உடல் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க முட்டைகோஸ் வேக வைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் பருகி வரலாம். இவற்றை நாம் தினமும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.

நமது உடலில் சர்க்கரையின் அளவு சரியான நிலையில் பரமாரிக்க சர்க்கரை நோயாளிகள் இவற்றை தினமும் பருகி வருதல் சிறந்தது.

முட்டைகோஸில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.

நரம்புகளுக்கு வலுகொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கவும், தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இவை செய்கின்றது.

முட்டைகோஸ் ஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். மற்றும் சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

இவை, பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்யும்.

இவற்றை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்பாக தோன்றும்.

முட்டைகோஸ் உடல் சூட்டைத் தணிக்கவும், நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கவும், குடல் சளியைப் போக்கவும், மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

இவற்றில் உள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகளும் பற்களும் உறுதியாளிக்கிறது. மேலும் எலும்புகள் எப்பொழுதும் வலுவாக இருக்க பெரிதும் உதவுகிறது.

நமது உடலில் நல்ல வியர்வைப் பெருக்கியாகவும், சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றவும் இவை உதவுகிறது. மேலும் தலைமுடி உதிர்வதைக் குறைக்கவும், மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கவும் செய்கின்றது.

இப்படி இன்னும் எண்ணற்ற ஆரோக்கிய பயன்களை கொண்டுள்ள முட்டைகோஸில் எப்படி சுவையான சூப் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

முட்டைகோஸ் சூப் ரெசிபிcabbage soup recipe in tamil

முட்டைகோஸ் தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் – 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

முட்டைகோஸ் சூப் சிம்பிள் செய்முறை:

முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

அதன்பின், இவற்றுடன் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது, அவை நன்கு கொதித்து வாசம் வரும். அவற்றை இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் தயராக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cabbage benefits in tamil how to make cabbage soup tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com