carrot recipes in tamil: வேர்க் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். மேலும், இவற்றை நாம் அன்றாட எடுத்துக்கொள்வதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
Advertisment
கேரட்டின் முக்கிய பயன்கள்
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவற்றில் உள்ள பீட்டா – கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைக்கிறது. இது கண்களில் ஈரப்பதத்தை காக்கப் பயன்படுகிறது. மேலும், வயதான காலத்தில் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்கவும் உதவுகிறது.
நம்முடைய அன்றாட சமையல்களில் இவற்றை சேர்த்துக்கொண்டால் மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறையும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடும் போது பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது. மேலும், வாயில் இருக்கும் கிருமிகள் போகவும், பற்களுக்கு நல்ல பலம் கிடைக்கவும் இவை உதவுகின்றன.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காய்கறியில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான துவையல் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கேரட் துவையல் செய்யத் தேவையான பொருட்கள்
கேரட் துருவல் - 1 கப் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 புளி - பாக்கு அளவு பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் - தேவையான அளவு நறுக்கிய இஞ்சி - சிறிதளவு.
கேரட் துவையல் சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் ஊற்றி சூடேற்றவும். பிறகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கேரட் துருவல், இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கி இறக்கவும்.
இவை நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான கேரட் துவையல் ரெடியாக இருக்கும். அவற்றை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் கலந்து பரிமாறி ருசிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“