சத்தான உணவுகளில் என்ன சாப்பிடலாம் என சிந்திக்கும் மக்கள் பழங்கள், காய்கறிகளுக்கு அடுத்ததாக பாதாம், வால்நட் ஆகியவற்றையே சத்தானவைகளாக கருதுகின்றனர். ஆனால், இவற்றை விட சத்தானதாக முந்திரி இருந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆப்பிரிகாவில் விளையும் முந்திரி, பாதாம் மற்றும் வால்நட்களுக்கு இணையாக சத்துகளைக் கொண்டவை. ஆனால், பெரும்பான்மையாக மருத்துவர்கள் பாதாம் மற்றும் வால்நட்களை சாப்பிட அறிவுறுத்துவர். ஆனால், முந்திரையை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.
முந்திரியில் சிலர் சொல்வதைப் போல கொலஸ்ட்ரால் என்பது இல்லை. நீரிழிவு நோயாளிகள் இரவு நேரத்தில் அனுபவிக்கும் உணர்விழப்புக்கு, தினமும் முந்திரியை சாப்பிட்டு வந்தால், அதன் பாதிப்புகளை தவிர்க்கலாம். உடலில், ரத்த சர்க்கரையின் அளவை சீராக ஒழுங்குப்படுத்த முந்திரியை சாப்பிடலாம்.
முந்திரியில், பொட்டாசியம், வைட்டமின் -ஈ மற்றும் பி-6 , போலிக் அமிலம் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் செறிந்துள்ளது. மேலும், முந்திரியில் உள்ள கொழுப்பில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக ஓலிக் அமிலம் உள்ளதால் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், முந்திரி உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். முந்திரி, ஜீரணத்தை ஊக்குவிக்க உதவுகிறது. ஆனால், முந்திரியை ஒரு சில வேளைகளில் அதிகப்படியாக சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படக்கூடும்.
முந்திரியில் உள்ள சத்துகள் நமது உடலின் இரும்புச்சத்தை சீராக பயன்படுத்த உதவுவோடு, கதிரியக்கத்திலிருந்தும் நம்மை காக்கிறது. உண்மையிலேயே முந்திரியானது, ஆரஞ்சு பழத்திலிருந்து கிடைக்கும் வைட்டமின் - சி யை காட்டிலும், ஐந்து மடங்கு செறிந்து காணப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது. மேலும், அவற்றிலுள்ள பிற சத்துகள் இதயநோய் வராமல் தடுப்பதோடு, மூட்டு வலி பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil