scorecardresearch

டேஸ்டியான காலிஃப்ளவர் குருமா… இட்லி, சப்பாத்திக்கு இதுதான் பெஸ்ட்…!

For chapati, idli, dosa cauliflower kurma recipe simple tips in tamil: காலிஃப்ளவர் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சி நோய்களை தடுக்கவும் உதவுகிறது.

Cauliflower recipes tamil: how make Cauliflower Kurma recipe in tamil

Cauliflower  recipes tamil: ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளதால் இவை உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. மற்றும் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சி நோய்களை தடுக்கவும் உதவுகிறது.

காலிஃப்ளவர் குருமா

இப்படி எண்ணற்ற மருத்துவ நன்மைகளையும், ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ள காலிஃப்ளவரில் டேஸ்டியான குருமா எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

காலிஃப்ளவர் செய்யத் தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் – 1
தேங்காய் துருவல் – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க…

சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை

காலிஃப்ளவர் குருமா

காலிஃப்ளவர் செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை நீரால் நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தொடர்ந்து தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

பிறகு, மிக்சியில் தேங்காய் துருவல், சோம்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இவற்றின் பச்சை வாசனை நீங்கியவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கி கொள்ளவும்.

பிறகு மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, பெருஞ்சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தொடர்ந்து அவற்றுடன் காலிஃப்வரையை இட்டு வதக்கவும்.

பின்னர், முன்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறவும். அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்.

பிறகு கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த காலிஃப்ளவர் குருமா தயாராக இருக்கும்.

இந்த சூப்பரான காலிஃப்ளவர் குருமாவை சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், நாண், தோசை என உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

காலிஃப்ளவர் குருமா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Cauliflower recipes tamil how make cauliflower kurma recipe in tamil

Best of Express