குக்கரில் சப்பாத்தி; 2 நிமிடத்தில் ரெடி… இந்த வீடியோவை பார்த்தீர்களா?

Chapati making in pressure cooker viral video tamil: பிரபலமான உணவாக வலம் வரும் சப்பாத்தியை ஒருவர் 2 நிமிடத்திலேயே பிரஷர் குக்கரில் தயார் செய்து அசத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Chappathi recipe Tamil: how to make chapati in cooker tamil viral video

Chappathi recipe Tamil: சமீப காலமாக ‘சப்பாத்தி’ தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணமாக சப்பாத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிடலாம். சப்பாத்தியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்க இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கோதுமை மாவினால் தயார் செய்யப்படும் இந்த சப்பாத்தி செய்ய நமக்கு பல வழிகள் உள்ளன. மேலும் சரியான சுற்று மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்தியை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த வழி உள்ளது. இந்த சிறந்த வழிகளுள் ஒன்று தான் பிரஷர் குக்கரில் சப்பாத்தியை தயார் செய்வது. 2 நிமிடத்தில் ஒருவர் பிரஷர் குக்கரில் சப்பாத்தி தயார் செய்து நமக்கு வியப்பூட்டுகிறார்.

தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மூன்று சப்பாத்திகள் உருட்டல் பலகை அல்லது சக்லா பெலனில் உருட்டப்பட்டு பின்னர் பிரஷர் குக்கருக்குள் வைக்கப்படுகின்றன. குக்கர் பின்னர் இரண்டு நிமிடங்கள் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு திறந்து பார்த்தால், அதன்உள்ளே சப்பாத்திகள் தயாராக உள்ளன.

சமையல் ஹேக்:-

இது குறித்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டாலும், மற்றவர்கள் ‘ஹேக்’ வேலை செய்யாது என்று கூறுகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற பல ஹேக்குகள் வைரலாகிவிட்டன. உதாரணமாக, பிரபல சமையல் வல்லுநர் விகாஸ் கன்னா, சமீபத்தில் வாழைப்பழங்களின் ஆயுளை அதிகரிக்க மிகவும் எளிமையான ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு முன்னதாக, மற்றொரு சமையல் ஆர்வலர் மீண்டும் பழமையான ரொட்டியை எவ்வாறு புதியதாக மாற்றுவது என்பதைக் காட்டினார்.

இப்படி நம்மை வியப்பூட்டும் இந்த ஹேக்குகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இதுவரை முயற்சித்தீர்களா மக்களே!!!

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chappathi recipe tamil how to make chapati in cooker tamil viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com