Health News in Tamil : உணவில் நறுமணத்துக்காக சேர்க்கப்படும் கருவேப்பிலையை, சாப்பிடும் போது தூக்கி எறிபவர்களே அதிகம். கருவேப்பிலை நமக்கு அளித்து வரும் நன்மைகளை தெரிந்துக் கொண்டால், அவற்றை உங்கள் உணவில் இருந்து தூக்கி எரியாமல் முழு மனதுடன் சாப்பிட்டு பயன் பெறுவீர்கள்.
Advertisment
தினமும் காலை வேளையில், ஏழு முதல் பத்து கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தலை குறைக்கவும், நரை முடி ஏற்படுவதை தடுக்கவும், தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
தலை முடி வளர்ச்சிக்கு கருவேப்பிலையை எப்படி சாப்பிடலாம்?
கருவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டப் பின், தண்ணீரையை குடிக்கலாம். இல்லையென்றால், கருவேப்பிலை இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைத்து, சாப்பிடலாம். வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் வேக வைத்த கருவேப்பிலையை அந்த தண்ணீரில் மசித்தும் குடித்து வரலாம். இதனால், தலைமுடி வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையான கூந்தலைப் பெறலாம்.
Advertisment
Advertisements
வேறு சில உடல் உபாதைகளுக்கு கருவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?
வயிற்று குமட்டல் :
குமட்டலுக்கு கருவேப்பிலை ஆகச் சிறந்த மருந்து. குமட்டலை தடுக்க, கருவேப்பிலை இலைகளை சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்தப் பின், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்று வறுத்து, சூடு தணிந்தப் பின் சாப்பிட்டு வரலாம்.
வாய் துர்நாற்றம் :
வாய் துர்நாற்றத்தைப் போக்க, 5 கருவேப்பிலை இலைகளை 5 நிமிடங்களுக்கு பற்களால் மென்று துப்பிய பின், சுத்தமான தண்ணிரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வயிற்றுப் போக்கு :
வயிற்றுப்போக்கு குணமாக, 30 கருவேப்பிலை இலைகளை நன்றாக அரைத்து, அதை மோரில் கலந்து குடிக்கலாம்.
நீரிழிவு நோய் குணமாக :
நீரிழிவு நோயாளிகள் கருவேப்பிலையை சட்னியாக செய்து, சாதம், ரொட்டி என எல்லாவற்றுடனும் சாப்பிட்டு வர, நீரிழிவு தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.
வாய்ப்புண் :
கருவேப்பிலை பொடியை தேனுடன் கலந்து வாய்ப்புண் உள்ள இடங்களில் தடவி வர, ஓரிரு நாள்களில் குணமடையும்.
நமது உணவில் தூக்கி எரியப்படும் கருவேப்பிலைக்கு இத்தனை மருத்துவ மகத்துவங்கள் இருக்க, இனியும் தூக்கிப் போட வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil