chutney recipes in tamil: நம்முடைய வீடுகளில் பல வகை சட்னிகள் செய்து சுவைத்திருப்போம். ஆனால் உல்லி எனப்படும் சின்ன வெங்காய சட்னி சுவைத்திருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்காது. இந்த வகை சட்னிகள் செட்டிநாட்டு சமையல் வகையைச் சார்ந்தது. இந்த அற்புதமான சட்னியோடு வெள்ளை பணியாரம் சேர்த்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்டாக இருக்கும்.
Advertisment
மேலும், இவற்றை நம்முடைய பிரபல காலை உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றோடு சேர்த்து ருசிக்கலாம். இந்த டேஸ்டியான சின்ன வெங்காய சட்னி எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
சின்ன வெங்காய சட்னி - தேவையான பொருட்கள்:-
அரைக்க
Advertisment
Advertisements
வரமிளகாய் - 7 காஷ்மீர் மிளகாய் - 5 தக்காளி - 400கிராம் பூண்டு பல்லு - 4 புளி - 4 கிராம்
தாளிக்க
நல்லெண்ணெய் - 5 டீ ஸ்பூன் கடுகு - 1டீ ஸ்பூன் கருவேப்பிலை - 15 சின்ன வெங்காயம் - 300 கிராம் உப்பு - 1 டீ ஸ்பூன் பெருங்காயம் தூள் - 1/4 டீ ஸ்பூன்
செய்முறை:-
முதலில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தோடு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் முன்னர் அரைத்து வைத்துள்ளவற்றை இவற்றோடு சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவைத்து கீழே இறக்கவும்.
இப்போது உங்களுக்கு பிடித்த காலை உணவுகளோடு சேர்த்து ருசிக்கவும்.