/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-23T180525.389.jpg)
clove tea recipe Tamil News: இந்திய மசாலாப் பொருட்கள் சுவையை மட்டுமின்றி, சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. நம் அன்றாட உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பெரும்பாலான மசாலாப் பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மற்றும் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கிராம்பு என்பது ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் நீங்கள் காணக்கூடிய ஒரு மசாலா ஆகும். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை அதிகரிக்கவும் மற்ற உடல்நலக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
மேலும், கறி சமையலின் போது இந்த மசாலாவை நீங்கள் சேர்க்கலாம். உங்கள் பானங்களில் கிராம்பு பொடியையும் சேர்த்து அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். நீங்கள் தேநீர் விரும்பியாக இருந்தால் கிராம்பு டீயும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-23T181847.638.jpg)
கிராம்பு தேநீர் அல்லது டீ செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
2 கப் தண்ணீர்
4-5 கிராம்பு
1/2 அங்குல இலவங்கப்பட்டை
1/2 அங்குல இஞ்சி
வெல்லம்
எலுமிச்சை சாறு
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-23T182051.582.jpg)
கிராம்பு தேநீர் அல்லது டீ எப்படி தயார் செய்வது?
முதலில் ஒரு கனமாக பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பிறகு அடுப்பில் இருந்து பாத்திரத்தை கீழே இறக்கி, அதில் தோராயமாக நசுக்கிய 4-5 கிராம்பு, துருவிய இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
இந்த பொருட்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கோப்பை அல்லது டம்ளரில் தண்ணீரை வடிகட்டி, அதில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இப்போது இந்த அற்புதமான மூலிகை தேநீரை அனுபவித்து மகிழவும்.
உடல் எடையை குறைக்க உதவும்
இந்த மசாலா தேநீர் உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இவற்றில் பயன்படுத்தப்படும் கிராம்பு மற்றும் மசாலாப் பொருட்களில் உள்ள கலவை உங்கள் செரிமான செயல்முறையை மேம்படுத்தும். இது இரண்டு செயல்முறைகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும். மசாலாப் பொருட்கள் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது, இது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-23T182111.266.jpg)
தோல் நோய்த்தொற்றை குணப்படுத்தும்
கிராம்புகளில் கிருமி நாசினிகள் நிறைந்துள்ளன. அவை தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகின்றன. கூடுதலாக, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சுருக்கங்கள், வயது புள்ளிகள் மற்றும் கறைகளின் தோற்றத்தை மெதுவாக்கும்.
சைனஸுக்கு சிகிச்சையளிக்கிறது
இந்த ஸ்பெஷல் டீ மார்பு நெரிசலுக்கு உதவுவதோடு சைனஸிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. இவற்றில் யூஜெனால் இருப்பதால், நெரிசல் நீங்கி நிவாரணம் கிடைக்கும். கிராம்புகளில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளன, இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த தேநீர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-23T182136.228.jpg)
ஈறு மற்றும் பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
அழற்சி எதிர்ப்பு சேர்மங்களால் நிரம்பிய கிராம்பு, பல் வலி மற்றும் ஈறு வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். மூலிகை தேநீர் உங்கள் வாயிலிருந்து பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் பல் பிரச்சனைகளில் இருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்.
கிராம்பு தேநீரின் பொதுவான பக்க விளைவுகள்
மசாலாப் பொருட்கள் பொதுவாக பாதுகாப்பானவை. ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது நீங்கள் சில பொதுவான பக்க விளைவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
இந்த கிராம்பு தேநீரை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது, நீங்கள் அதிகமாக உட்கொண்டால் இரைப்பை குடல் வலி, தசை வலி மற்றும் சோர்வு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் கிராம்பு தேநீரின் அளவுடன் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.மசாலா தேநீர் அதிகமாக உட்கொள்வது அவர்களின் குழந்தைகளுக்கு கூட தீங்கு விளைவிக்கும்.
இந்த டீயைக் குடித்தவுடன் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டால், அதைத் தொடர வேண்டாம். மூச்சுத் திணறல், காய்ச்சல் அல்லது சளி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.