எலுமிச்சை, கருவேப்பிலை, வெண்டைக்காய்… ஒரு வாரம் வரை ஃப்ரஷ்ஷாக இருக்க இதுதான் வழி!

simple cooking hacks in tamil: வீட்டில் அரைக்காமல் இருக்கும் கோதுமையில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைக்கவும். இது கோதுமையில் ஒரு பூச்சி கூட வரமால் இருக்க உதவும்.

simple cooking hacks in tamil: வீட்டில் அரைக்காமல் இருக்கும் கோதுமையில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைக்கவும். இது கோதுமையில் ஒரு பூச்சி கூட வரமால் இருக்க உதவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cooking hacks in tamil: simple tricks for easy cooking

cooking hacks in tamil: அன்றாட புதிய புதிய உணவுகளை தயார் செய்யும் நாம் அதன் ருசியை அதிகரிக்கவும், எளிமையான முறையில் தயார் செய்யவும் சில வழிகளை அறிந்து வைத்திருப்போம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவுள்ள சில குறிப்புகள் மூலம் நம்முடைய சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொண்டு வர முடியும். அப்படியான சில எளிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

வாழைக்காய் ஃப்ரஷ்ஷாக இருக்க டிப்ஸ்:

Advertisment
publive-image

வாழைக்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க, அவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உள்ளே மூழ்கும்படி வைத்து விடவும். இது வாழைக்காய் ஒரு வாரத்திற்கு மேல் கெடாமல் அப்படியே இருக்க உதவும்.

எலுமிச்சை ஃப்ரஷ்ஷாக இருக்க டிப்ஸ்:

publive-image
Advertisment
Advertisements

எலுமிச்சை பழம் அழுகிப் போகாமல் அல்லது காய்ந்து போகாமல் இருக்க அவற்றை தினமும் ஒரு மணி நேரமாவது ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து தண்ணீரில் போட்டு வைக்கவும். இது எலுமிச்சை பழம் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்க உதவுகிறது.

வெண்டைக்காய் எலுமிச்சை ஃப்ரஷ்ஷாக இருக்க டிப்ஸ்:

publive-image

வெண்டைக்காய்கள் வாங்கிய சில தினங்களிலேயே வாடிப்போய்விடும். அவற்றை நீங்கள் சில நாட்களுக்கு வைத்திருந்து சமைக்க போகிறீர்கள் என்றால், அவற்றின் காம்பு மற்றும் தலை பகுதியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இது வெண்டைக்காய் முற்றிப் போகாமல் அப்படியே இருக்க உதவும்.

பருப்பு வேக டிப்ஸ்:

மழை பெய்யும் போது மழைத் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மழைத் தண்ணீரில் பருப்புகளை வேக வைக்கவும். மழைத் தண்ணீரில் வேக பருப்பு சட்டென மலர்ந்து வரும். மேலும் நல்ல ருசியாகவும் இருக்கும்.

ஊறுகாய் கெடாமல் இருக்க டிப்ஸ்:

வீட்டில் ஊறுகாய் தயார் செய்யும் மக்கள், ஊறுகாயை கிளற மரத்தால் ஆனா கரண்டியை பயன்படுத்தவும். இது ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.

கோதுமையில் பூச்சி பிடிக்காமல் இருக்க டிப்ஸ்:

publive-image

வீட்டில் அரைக்காமல் இருக்கும் கோதுமையில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைக்கவும். இது கோதுமையில் ஒரு பூச்சி கூட வரமால் இருக்க உதவும்.

எலுமிச்சை சாறு பிழிய டிப்ஸ்:

எலுமிச்சை பழங்கள் காய்ந்து போய் விட்டால் அதிலிருந்து சாறு எடுப்பது மிகவும் கடினமாகி விடும். எனவே, அவற்றை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்களுக்கு போட்டு எடுத்தால் சாறு சுலபமாக பிழியலாம். மேலும் நிறைய எலுமிச்சை சாறு கிடைக்கும்.

கருவேப்பிலை காயாமல் இருக்க டிப்ஸ்:

publive-image

கருவேப்பிலையை பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து வைப்பதை விட, ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். இது கருவேப்பிலை சீக்கிரம் காய்ந்து போகாமல் இருக்க உதவுகிறது. மேலும் அவை பச்சையாக அப்படியே நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Food Recipe Healthy Food Tips Health Tips Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tamil News 2 Food Receipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: