Shanthini U.R
Cooking oils reduce weight : நம்மில் பலர் மிகப்பெரிய உணவுப் பிரியராக இருப்பார்கள். உணவின் மீது இருந்த காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடி விட்டது என கவலைப்படுவோரே இங்கு அதிகம்.
ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகும். திடீரென உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் சாப்பிடும் உணவு வகைகளை கவனிக்க தவறுவதும், சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்கத் தவறுவதுமே எடையைக் குறைப்பதில் ஏற்படும் தோல்விக்கு காரணம்.
Cooking oils reduce weight
எண்ணெய் வகைகள் கொழுப்பு அதிகம் உள்ள ஒருபொருள் ஆகும். கொழுப்பைத் தவிர்ப்பது நல்லது, ஆனால் எல்லா வகை கொழுப்புகளும் நமக்குத் தீங்குவிளைவிப்பதில்லை. உடல் எடை அதிகரிக்காமல்கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு என்ன வகையிலானஎண்ணெய் வகைகளைப் பயன்படுத்தலாம்? இதோ, உங்களுக்கான வழிமுறைகள்.
ஆலிவ் எண்ணெய்
ஆரோக்கியமான எண்ணெய் வகையில் ஒன்று ஆலிவ் எண்ணெய். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படா ஆலிவ் எண்ணெய்யும் இருக்கின்றது.
இந்த இரு எண்ணெய்களுமே 73% நல்ல கொழுப்பு மற்றும் 14% கெட்ட கொழுப்பினை கொண்டிருக்கின்றன.
சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் கெமிக்கல் முறையின்றி தயாரிக்கப்படும் ஆலிவ் எண்ணெய்யை விட சிறந்தது இல்லை
என்றாலும் அதனை அதிக வெப்பநிலையில் சமைக்கலாம். செரிமான பிரச்சினை கொண்டோருக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்த மருந்தாகும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் 61% நல்ல கொழுப்பையும் 8% கெட்ட கொழுப்பையும் கொண்டிருக்கின்றது.
ஆலிவ் எண்ணெய் உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணெய்குறைந்த அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டிருக்கிறது.
ஆனால் மிக குறைந்த அளவு ஒமேகா -3 கொழுப்பு உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு நல்லது. உணவுப்பொருட்களை வறுக்கும் போதும் அல்லது பொறிக்கும் போதும் உபயகிக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
கெட்ட கொழுப்பு அதிகளவு இருந்தாலும், தேங்காயஎண்ணெய் எடை குறைப்புக்கு சிறந்த ஒன்றாகும்.
தேங்காய் எண்ணெய் எடைக் குறைப்புக்கு உதவுவதுடன் ஆச்சரியமிக்க பல நல்ல உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதில் 6% நல்ல கொழுப்பும் 87% கெட்ட கொழுப்பும் உள்ளது.
நட்ஸ் மற்றும் விதை எண்ணெய்கள்
நட்ஸ் மற்றும் விதை எண்ணெய்கள் ஆகியவை நல்லகொழுப்புகளை அதிகமாக கொண்டிருக்கின்றது.
ஹாசல்நட் எண்ணெயில் 82% நல்ல கொழுப்பு, வெறும் 7% கொழுப்பு மட்டுமே இருக்கிறது.
சூரியகாந்தி விதை எண்ணெய் 79% நல்ல கொழுப்பையும்14% கெட்ட கொழுப்பையும் கொண்டுள்ளது.
பாதாம்எண்ணெயில் 65% நல்ல கொழுப்பு மற்றும் 7% கெட்டகொழுப்பு உள்ளது.
எந்த எண்ணெய்யை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், எண்ணெய் என்பதே கலோரிகளை அடர்த்தியாக கொண்டிருக்கக்கூடியது என நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் 120 கலோரிகளை கொண்டுள்ளது.
எனவே, நீங்கள் அதை மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்களை தெரிவுசெய்து சமையலுக்கு பயன்படுத்தும் போது உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க : Weight loss tips: கடும் உடற்பயிற்சி…. கடும் டயட்…. இது போதுமா உடல் எடை குறைக்க?