Type 1 diabetes Tamil News: டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட மருத்துவ நிலை ஆகும். இது வயிற்றுப் பகுதியில் உள்ள ஒரு உறுப்பு, மிகக் குறைந்த அளவு அல்லது இன்சுலினை உற்பத்தி செய்யாத போது ஏற்படும். இதன் காரணமாக, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு தினசரி இன்சுலின் அளவு தேவைப்படுகிறது. இது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தோலின் கீழ் ஒரு ஷாட் அல்லது இன்சுலின் பம்ப் மூலம் நிர்வகிக்கப்படலாம். மருந்தளவு நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, காலப்போக்கில் உடலின் தேவைக்கேற்ப சரிசெய்யப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமான ஒரு ஜமா ஆய்வில், மனித இன்சுலின் தினசரி டோஸ், பொதுவாக ஒரு நாளைக்கு பல முறை தோலடியாக செலுத்தப்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் சிக்கல்கள் சோதனை (DCCT) மற்றும் நீரிழிவு தலையீடுகள் மற்றும் சிக்கல்களின் தொற்றுநோயியல் (EDIC) ஆய்வுகளின் தரவுகளைப் பயன்படுத்தி, 28 வருட பின்தொடர்தலில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் நிகழ்வுகளுடன் ஆபத்து காரணிகளின் தொடர்புகளை ஆய்வு செய்தது.
1,303 நோயாளிகளின் மாதிரி அளவுடன், உயர்-டோஸ் மற்றும் குறைந்த-டோஸ் குழுவில் ஆபத்து விகிதங்கள் கணிசமாக அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. இது புகைபிடித்தல், மது அருந்துதல், மருந்துகள் மற்றும் குடும்ப வரலாறு போன்ற 50 பொதுவான ஆபத்து காரணிகளை மேலும் ஆய்வு செய்தது.
குழுவில் உள்ள 1,303 நோயாளிகளில், 93 (7 சதவீதம்) பேர் புற்றுநோயைக் கண்டறிந்துள்ளனர், மேலும் 1,000 நபர்-ஆண்டுகளுக்கு நிகழ்வு விகிதம் 2.8 (95 சதவீதம்) என்று அது குறிப்பிட்டது. முதல் நோயறிதலில், சராசரி வயது 50 ஆண்டுகள், மற்றும் நீரிழிவு நோயின் சராசரி காலம் 25 ஆண்டுகள். 93 நோயாளிகளில், 57 பேர் பெண்கள் (61 சதவீதம்), 36 ஆண்கள் (39 சதவீதம்), 8 (9 சதவீதம்) பேர் 10 ஆண்டுகளில் புற்றுநோயை உருவாக்கினர், 31 (33 சதவீதம்) பேர் 11 முதல் 20 வயதுக்குள் புற்றுநோயை உருவாக்கினர். மேலும் 54 பேர் (58 சதவீதம்) 21 முதல் 28 வயதுக்குள் புற்றுநோயை உருவாக்கியுள்ளனர்.
ஆனால் என்ன தொடர்பு?
நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஆகியவை நாள்பட்ட நிலைகள், மேலும் இந்த இரண்டின் சுமையும் “நாட்டில் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது” என்று வொக்கார்ட் மருத்துவமனை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனிகேத் முலே கூறியுள்ளார்.
“உடல் பருமன் நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு ஒரு உந்து காரணியாக இருக்கலாம். இது உலகெங்கிலும் அதிக இறப்பு மற்றும் நோயுற்ற விகிதங்களுக்கு வழிவகுக்கிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளின்படி, இன்சுலின் எதிர்ப்பு அல்லது ஹைப்பர் இன்சுலினீமியா போன்ற வளர்சிதை மாற்ற நிலைகளில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களால் மாற்றப்பட்ட புற்றுநோய் அபாயத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாக நீரிழிவு உள்ளது. ஆய்வில், அதிக அளவு இன்சுலின் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் அபாயம் உள்ளது” என்று டாக்டர் முலே கூறியுள்ளார். இருப்பினும், புற்றுநோய்க்கு “உயிர் காக்கும் மருந்து” இன்சுலினை நேரடியாக இணைப்பது மிக விரைவில் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
“வெளிப்புறமாக கொடுக்கப்பட்ட இன்சுலின் சில உயிரணுக்களின் பெருக்கத்தை ஏற்படுத்தும் வளர்ச்சி காரணிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பு எப்பொழுதும் உள்ளது. நீரிழிவு மேலாண்மையில், பல சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் இன்சுலின் சஞ்சீவனி பூட்டிக்கு சமமான உயிர்காக்கும் முறையாகும். மருத்துவ மூலிகையான செலாஜினெல்லா பிரையோப்டெரிஸ் எந்த நோயையும் குணப்படுத்தும்)” என்று மூத்த நீரிழிவு மருத்துவர் அனில் போராஸ்கர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை வலியுறுத்தி, “பல காரணிகள்” அதற்கு காரணமாக இருக்கலாம் என்று டாக்டர் போராஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். “ஊட்டச்சத்து குறைபாடு, காற்று மற்றும் நீர் மாசுபாடு, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உணவு மாசுபாடு ஆகியவை இதில் அடங்கும். இந்த காரணிகள் அனைத்தும் ஃப்ரீ-ரேடிக்கல் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டுவதற்கு காரணமாக இருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
நிறைய கலவையான தரவுகள் உள்ளன என்று தெரிவித்துள்ள மருத்துவ ஆன்காலஜி ஆலோசகர் டாக்டர் தன்வி சூட், “ஒருவேளை நோயாளிக்கு நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிற ஆபத்து காரணிகள் இருக்கலாம், இது புற்றுநோய் உருவாவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் வழக்கமான இன்சுலின் பயன்பாடு இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் நல்லது. புற்றுநோய் உருவாவதற்கான கூடுதல் அச்சுறுத்தல் எதுவும் இல்லை,” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
என்ன செய்ய வேண்டும்?
“ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாமல் இருத்தல், மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும், உகந்த எடையைப் பராமரித்தல் உள்ளிட்ட சீரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ” டாக்டர் முலே கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil