Diabetic Diet Health tips : செர்ரி பழம், சாப்பிடுவதால் அதில் இருக்கக்கூடிய ஆண்டிஆக்ஸிடண்ட் அந்தோசையனின் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய இயற்கை சர்க்கரை உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்கும்.
செர்ரி பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் வலி குணமாவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செர்ரியில் மெலடோனின் இருப்பதால் தூக்கம் சீராக இருக்கும். நார்ச்சத்து அதிகமாகவும், க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைவாகவும் அதில் இருப்பது நன்மையே.
ஸ்மூத்தி:
உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதற்கு, யோகர்ட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, சியா விதைகள் மற்றும் பாதாம் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதில் தேன் அல்லது சர்க்கரை சேர்க்க தேவையில்லை.
சாலட்:
செர்ரி, கீரை, ஃபெட்டா மற்றும் உங்களுக்கு பிடித்தமான ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்கள் சேர்த்து சாலட் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியது.
செரல்ஸ்:
செரல்சுடன் செர்ரி, நட்ஸ் சேர்த்து கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதை காலை நேரத்தில் சாப்பிடலாம்.
யோகர்ட்:
யோகர்ட்டில் செர்ரி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எனவே யோகர்ட்டுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறப்பு.
மேலும் படிக்க : நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கான ஸ்பெசல் உணவு : பேரிச்சை மஃப்பின்