இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.
எனினும், வெளிப்புறமாக இத்தனை பொருள்களை பயன்படுத்தினாலும் நம் உணவில் இருந்து கிடைக்கும் சத்துகள் தான் முடி வளர்ச்சிக்கு மிக அவசியம். காரணம், முடி உதிர்வு என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் முடி உதிர்வில் இருந்து தான் தொடங்கும். அதன்படி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்வை தடுக்கவும் சில உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
அதனடிப்படையில், புரதச்சத்து முடி வளர்ச்சிக்கு மிக அவசியம். அதனால், தினசரி உணவில் பருப்பு மற்றும் பயிறு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக பச்சை பயிறு, கொண்டை கடலை, பன்னீர் போன்றவற்றை சாப்பிடலாம்.
அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் இருந்து நமக்கு தேவையான புரதம் கிடைத்துவிடும்.
இதேபோல், வைட்டமின் சத்துகளும் மிக அவசியம். இதற்காக பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். மேலும், கீரை வகைகளும் நம் அன்றாட உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா ஆகியவையும் முடி வளர்ச்சி நல்லது.
பாதாம், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் ஆகியற்றையும் ஒரு கைப்பிடி அளவிற்கு சாப்பிடலாம். இவற்றில் இருந்து நமக்கு தேவையான மினரல்கள் கிடைத்து விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.