கொரோனா வைரஸ் vs சளிக்காய்ச்சல் – வேற்றுமை என்ன?

உங்களுக்கு சளி, இருமல், மூக்கு ஒழுகுதல் உள்ளதா? அது சாதாரணமான பருவகால சளிக்காய்ச்சலா அல்லது புதிய கொரோனா வைரஸ் (novel corona virus or covid – 19) தாக்கமா என்று கண்டுபிடிப்பது எப்படி? கொரோனா வைரஸ் அல்லது கோவிட் – 19 (novel corona virus or…

By: March 10, 2020, 7:33:15 PM

உங்களுக்கு சளி, இருமல், மூக்கு ஒழுகுதல் உள்ளதா? அது சாதாரணமான பருவகால சளிக்காய்ச்சலா அல்லது புதிய கொரோனா வைரஸ் (novel corona virus or covid – 19) தாக்கமா என்று கண்டுபிடிப்பது எப்படி?

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் – 19 (novel corona virus or covid – 19) அசுர வேகத்தில் அனைவரையும் தொற்றி வருகிறது. அது காய்ச்சலில் இருந்து மாறுபட்டதா என்பது குறித்து, பெரும்பாலானோருக்கு வியப்பாக உள்ளது. சாதாரண காய்ச்சலையும், கொரோனா வைரசையும் பிரித்து கூறுவது எப்படி என்ற குழப்பத்தில் உள்ளனர். அதுகுறித்து நாங்கள் கண்டுபிடித்துள்ளது இங்கே கூறப்பட்டுள்ளது. கோவிட் – 19 மற்றும் சளிக்காய்ச்சல் இரண்டுமே வைரஸ் தொற்றால், ஏற்படக்கூடியதும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு, இருமல், சளி, சுவாசிக்கும்போது சிந்தும் சளி மூலம் பரவுவதும் ஆகும். கொரோனா வைரஸ் மற்றும் சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இரண்டுமே வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவையாகும்.

கொரோனா பாதிப்பு தீவிரமானால், நாட்டின் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்திக்கும்

சளிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ், பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதோ, இருமும்போதோ காற்றில் கலந்துவிடும். அது காற்றின் மூலம் மற்றவருக்கு பரவிவிடும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று, பாதிக்கப்பட்ட நபரையோ அல்லது வைரஸ் கிருமி உள்ள இடத்தையோ தொடுவதாலே ஏற்படுகிறது என்று குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனை மருத்துவர் வெங்கட் விளக்குகிறார்.

உலக சுகாதார நிறுவனம், சீனாவுடன் இணைந்து கோவிட் – 19 குறித்து நடத்திய ஆய்வின் பிப்ரவரி மாத அறிக்கையின்படி, கோவிட் – 19 காற்றின் மூலம் பரவவில்லை என்று அறிவிக்கப்பட்டது. கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அது பெரும்பாலும் காற்றின் மூலம் பரவவில்லை என்று நம்பப்படுகிறது. அது கற்பனை என்றாலும், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில், காற்றின் மூலம் பரவுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் கூறியபடி, கோவிட் – 19 மற்றும் சளிக்காய்ச்சல், இரண்டுமே வைரசால் ஏற்படக்கூடிய தொற்று, அது சுவாசத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, குமட்டல், மூச்சுத்திணறல், நெஞ்சில் சளி கட்டிக்கொள்வது, உடல் வெப்ப நிலை உயர்வு, அனைத்தும் அதிகரித்து, நிமோனியாவை ஏற்படுத்தும். சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் 3 அல்லது 4 நாட்களிலே தெரிந்துவிடும். ஆனால், கொரோனா வைரஸ்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு 2 முதல் 14 நாட்களாகிவிடும்.

இரண்டுக்குமான அறிகுறிகள் இருமல், சலி, மூக்கு ஒழுகுவது, காய்ச்சல் என்பதே ஆகும் என்று டாக்டர் வெங்கட் கூறுகிறார். மேலும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பும்போது மட்டும்தான், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவரும். சளிக்காய்ச்சலுக்கு, பாலிமெராசே செயின் ரியாக்சன் எனப்படும் பிசிஆர் சோதனை, வைரசின் ஆர்என்ஏ(ரிபோநியூகிளிக் அமிலம், எந்த உயிரினத்திக்கும் தேவையானது.

உயிரணுக்களில் காணப்படும் வேதிப்பொருளாகும்)வில், செய்யப்படும். இரண்டு வைரஸ்களுக்கும் வெவ்வேறான பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். இரண்டு வைரசும் வெவ்வேறு மரபணுவைச் சார்ந்தது. அது சோதனை மையத்தில் செய்யப்படும் பரிசோதனை மூலம் மட்டுமே வேறுபடுத்திக்காட்டப்படும். மருத்துவ ரீதியாக முடியாது என்று டாக்டர் வெங்கட் கூறுகிறார்.

வளர்ப்பு பிராணிகளால் கொரோனா வைரஸ் பரவுகிறதா? : நிபுணர்கள் சொல்வது என்ன?..

கொலம்பியா, ஆசியா மருத்துவமனையைச் சேர்ந்த, உள் மருந்து மூத்த ஆலோசகர் டாக்டர் மஞ்சீத்தாநாத் தாஸ், இன்ப்ளுயன்சா வைரஸ் ஏற்படுத்தும் சுவாச தொற்று நோயால் வரும் சளிக்காய்ச்சல், மூக்கு, தொண்டை, சில நேரங்களின் நுரையீரல் ஆகியவற்றில் தொற்றை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே ஆஸ்துமா, இருதய நோய், சர்க்கரை உள்ளிட்ட வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து அதிகம். நிமோனியா உள்ளிட்ட தீவிர சிக்கல்களை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார். துவக்கத்தில் இரண்டும் ஒன்றுபோலத்தான் இருக்கும். ஆனாலும் இரண்டும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களாகும். புதிய கொரோனா வைரஸ் இதற்கு முன் மனிதர்களில் இருந்ததில்லை.

2019ம் ஆண்டில்தான் மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது இன்புளுயன்சா வைரஸ் 1918ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. சளிக்காய்ச்சல் ஒது பருவகால தொற்றாகும். ஒவ்வொரு ஆண்டும் வரும். ஆனால், கொரோனா வைரஸ் பருவகாலத்தில் வரக்கூடியதா என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. ஏனெனில் இது புதிய நோய் தொற்று என்று டாக்டர் வெங்கட் கூறுகிறார்.

ஆனாலும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் கோவிட் – 19ன் தீவிரம் மற்றும் அறிகுறிகள் குறித்தும் மேலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதை தடுப்பதற்கு சிறந்த வழி நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே ஆகும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். கைகளால் கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றை தொடாமல் இருக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாத நேரத்தில் வீட்டிலேயே இருத்தல் நல்லது.

இதுவரை கோவிட் 19ஐ எதிர்கொள்ள நல்ல சுகாதார பழக்கங்களை கடைபிடிப்பது, தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்தான் சிறந்தது என்று டாக்டர் தாஸ் கூறுகிறார். சளிக்காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

தமிழில்: R. பிரியதர்சினி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Difference between corona virus fever and usual fever

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X