இந்தியாவில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு புரதச் சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புரதச் சத்து குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதுடன், பல விதமான நோய்கள் எளிதில் தாக்கக் கூடும். இதனால் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
குறிப்பாக, பிரபல மருத்துவர் சிவராமன் ஒரு கிலோவிற்கு 6 கிராம் வீதம் புரதத்தை உணவில் இருந்து எடுக்க வேண்டுமெனக் கூறுகிறார். அவ்வாறு பார்த்தால் சுமார் 65 கிலோ எடை கொண்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 390 கிராம் புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர், பன்னீர், சோயா, முட்டை உள்ளிட்ட உணவுகளில் புரதச் சத்து நிறைந்து காணப்படுகின்றன.
அவ்வாறு புரதச் சத்து மிகுந்த சாலட் செய்யும் முறையை தற்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருள்கள்,
முளைகட்டிய பயிர் ஒரு கப்
நன்கு வதக்கிய பன்னீர் ஒரு கப்,
நன்கு வதக்கிய சோயா ஒரு கப்,
தக்காளி அரை கப்,
வெள்ளரிக்காய் அரை கப்,
கேரட் அரை கப்,
உப்பு அரை டேபிள் ஸ்பூன்,
மிளகு தூள் அரை டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்,
மேற்கூறிய அனைத்து பொருள்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து சாலட் பதத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டால், நம் உடலுக்கு தேவையான புரதச் சத்தை நாம் சுலபமாக பெற முடியும். உடற்பயிற்சி தீவிரமாக செய்பவர்களுக்கு தான் புரதச் சத்து தேவை என்னும் கருத்து பலரிடம் காணப்படுகிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களுக்கும் புரதம் என்பது இன்றி அமையாத ஒன்று. அதனை நாம் தினசரி எடுக்கும் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“