கைகள் விறைத்தல்; கால்கள் இழுத்தல்... உஷார் மக்களே, உங்களுக்கு தேவை இந்தக் கீரை: டாக்டர் வேணி
கால்சியம் சத்தின் அவசியம் குறித்தும், எந்த வகையான உணவுகள் மூலம் கால்சியம் சத்தை பெறலாம் என்றும் மருத்துவர் வேணி குறிப்பிட்டுள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
நம் உடலில் 99 சதவீத கால்சியம் எலும்பு மற்றும் பற்களில் தான் இருக்கிறது என மருத்துவர் வேணி கூறுகிறார். மீதமுள்ள 1 சதவீதம் தான் உடலின் மற்ற உறுப்புகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கால்சியம் பெருமளவு உணவுகள் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கிறது.
Advertisment
பாலில் அதிகமாக கால்சியம் சத்து இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால், கீரை வகைகளில் இருந்து அதிகமாக கால்சியம் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் வேணி கூறுகிறார். குறிப்பாக, முருங்கைக் கீரையில் கால்சியம் நிறைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அத்திப்பழம், ராகி, பாதாம், கேழ்வரகு ஆகியவற்றிலும் கால்சியம் சத்து இருக்கிறது. அசைவ உணவுகளில் மத்தி மீனில் கால்சியம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கால்சியம் சத்தை பெற முடியும்.
ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் உடலுக்கு தேவை என மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் 1200 முதல் 1300 மில்லி கிராம் வரை கால்சியம் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், கால்சியத்தை அதிகமாக எடுத்துக் கொண்டாலும், குறைவாக எடுத்துக் கொண்டாலும் பிரச்சனை தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
இரத்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கால்சியம் அளவு எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். கால்சியம் சத்து குறைபாட்டை சில அறிகுறிகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். கை மற்றும் கால்கள் அடிக்கடி விறைத்துக் கொள்வதை போன்று இருந்தால், கால்சியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.