dosa recipe in tamil: நம்முடைய அன்றாட உணவுகளின் பட்டியலில் தோசைக்கென தனி இடம் உண்டு. ஏனென்றால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் எளிதில் தயார் செய்யக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இந்த அற்புதமான உணவை இப்போது நாம் பல வகைகளில் ருசித்து மகிழ்ந்து வருகிறோம். குறிப்பாக, வீடுகளில் தயார் செய்யப்படும் விதவிதமான தோசைகளுக்கு விதவிதமான சட்னிகள் என அசத்துவோம்.
Advertisment
நம்முடைய வீடுகளில் தோசை தயார் செய்யும் போது சில சமயங்களில் வீட்டில் தோசை மாவு தீர்ந்து இருப்பதை கவனிக்க மறந்திருப்போம். அந்த தருணத்தில் அதற்கு பதிலாக என்ன தயார் செய்வது என்று நாம் குழம்பி விடுவோம். இதுபோன்ற நேரங்களில் நம்முடைய வீட்டில் இருக்கும் ரவையை வைத்து உடனடி தோசை மாவு தயார் செய்யலாம்.
ரவா தோசையா! என ஆச்சரியப்பட வேண்டாம். ரவையை நாம் தயாரிக்கும் தோசை மாவுடன் சேர்க்கும்போது அவை ஒரிஜினல் தோசை மாவு போன்றே இருக்கும். இது கடினமது என பலர் நினைப்பது உண்டு.
அப்படியில்லாமல், சிம்பிள் செய்முறையில் எப்படி சுவையான ரவை மாவு தோசைக்கான மாவு தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
Advertisements
ரவை மாவு தோசைக்கு தேவையான பொருட்கள்:-
ரவை – 1 கப் தயிர் – 1 கப் தேங்காய் துருவல் – 1/2 கப் உப்பு – 1/2 ஸ்பூன் சோடா உப்பு – 1/4 ஸ்பூன்.
செய்முறை:-
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில், ஒரு கப் ரவை, ஒரு கப் புளித்த தயிர், அரை கப் தேங்காய் துருவல், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.
மாவு நன்றாக ஊறிய பின்னர், தோசைக்கல்லை சூடேற்றி தோசை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
இந்த அருமையான மொறுமொறு தோசையை உங்களுக்கு விருப்பமான சட்னிகளுடன் சுவைக்கவும்.