அந்த காலத்தில் பெரும்பாலான சமையல் பொருட்கள் மண்பாண்ட பொருட்களாக இருந்தன. நாளடைவில் பிளாஸ்டிக் எனப் பலவித பொருட்கள் சமையல் அறையில் நுழைந்தன. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. பழங்காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்க மண்பானையை பயன்படுத்தின. இப்போது அது காட்சிப்பொருளாக பார்க்கப்படுகிறது. மண்பானை தண்ணீர் குடிப்பால் என்னென்ன நம்மைகள் என மருத்துவர். திக்ஷா பவ்சர் விவரிக்கிறார்.
மண்பானையில் தண்ணீர் சேமித்து வைத்து குடிப்பதால் அசிடிட்டி, ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் எரிச்சல், உடல் சூடு போன்ற வெப்பப் பிரச்சினைகள் குறைவாக என்னிடம் சிகிச்சை பெற்ற பல நோயாளிகள் தெரிவித்துள்ளனர். அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றத்தை செய்ததால் பலன் பெறுகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் ஃபிரிட்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, மண்பானை தண்ணீர் குடிக்கலாம் என்றும் அது உடலுக்கு நல்லது என்றும் கூறினார்.
மண்பானை தண்ணீர் நன்மைகள்
ஆயுர்வேத நிபுணர் கூறுகையில் மண்பானை, நீரில் உள்ள அமில தன்மையை குறைத்து, அதன் PH அளவை சமநிலைப்படுத்துகிறது. இதனால் அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையை கட்டுப்படுத்தப்படுகிறது என்றார்.
மெட்டபாலிசம் அதிகரிக்க உதவுகிறது
மண்பானைகளில் BPA அதாவது, (பிஸ்பெனால் ஏ, பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படுத்துவது) போன்ற பொருட்கள் இல்லை. இதுவே நமது உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. மேலும், உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
குளிர்ந்த நீர்
மண்பானை தண்ணீர் இயற்கையாகவே குளிர்ந்த நீராகிறது. வெப்பநிலையை 5 டிகிரி வரை குறைத்து குளிர்ந்த நீராக மாறுகிறது. ஃபிரிட்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பவர்களுக்கு இது சிறந்த மற்றும் நன்மையான மாற்றமாக இருக்கும்.
வெப்ப தாக்கம் குறையும்
கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரிக்கும். மண்பானை தண்ணீரில் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், வெப்ப தாக்கத்தை தவிர்க்க முடிகிறது என மருத்துவர் திக்ஷா கூறினார்.