Easy way test blood sugar level in home in tamil: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் நம் ஆரோக்கியத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதே முழுமையான ஆரோக்கியத்தை அடைய ஒரே வழி. நோயின் எந்தவொரு ஆரோக்கியமற்ற தாக்கங்களையும் தவிர்க்க, மருத்துவர்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க பரிந்துரைக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் வீட்டிலேயே துல்லியமான இரத்த குளுக்கோஸ் அளவுகளை சரிபார்க்க உதவும் சுகாதார சாதனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் நீங்கள் மருத்துவமனைகளுக்கோ அல்லது இரத்த பரிசோதனை நிலையங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பரிசோதனைக் கருவிகளை வாங்குவதன் மூலம், வீட்டிலேயே இரத்த சர்க்கரையை பரிசோதித்து, உங்கள் ஆரோக்கியத்தை வெற்றிகரமாக கண்காணிக்கலாம்.
உங்கள் இரத்த சர்க்கரையை வீட்டிலேயே துல்லியமாக பரிசோதிப்பதற்கான சில வழிகள் இங்கே.
இரத்த சர்க்கரையின் துல்லியமான முடிவுகளை உறுதிப்படுத்த, பிராண்டட் சாதனத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். பொதுவான தயாரிப்புகள் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும், அது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானதாக இருக்கும்.
பரிசோதனைக் கருவியை வாங்கும் போது, தொழில்நுட்பம் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நீங்கள் தெளிவு பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் சுகாதார நிபுணரிடமிருந்து பரிசோதனை கருவிக்கான பரிந்துரைகள் மற்றும் உதவிக்குறிப்புகளையும் நீங்கள் பெறலாம்.
எப்பொழுதும் சோதனைக் கருவியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலங்களில் சோதனை உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.
பரிசோதனைக்கான கீற்றுகளை (ஸ்ட்ரிப்ஸ்) வாங்கும் போது, உங்கள் சாதனத்துடன் பொருந்திப் போவதை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: ஈஸி ரெசிபி… 10 நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் தயார்!
பரிசோதனைப் பட்டியில் இரத்தத்தை விடும்போது, போதுமான அளவு (தேவையான) இரத்தத்தை விடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போதுமான இரத்தம் இல்லையென்றால், அது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
இரத்த சர்க்கரை பரிசோதனைக்கு முன் எப்போதும் உங்கள் கைகளை கழுவவும். முடிவுகளை சேதப்படுத்தக்கூடிய, உங்கள் கைகளின் மேற்பரப்பில் உள்ள அனைத்து தூசி துகள்கள் மற்றும் அசுத்தங்கள் அகற்றப்படுவதை உறுதி செய்வதாகும்.
நீங்கள் சற்று வலியைக் குறைக்க விரும்பினால், விரல் நுனிக்குப் பதிலாக, இரத்தம் எடுக்க, விரலின் பக்கத்தைப் பயன்படுத்தவும்.
உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை தொடர்ந்து பரிசோதித்து வரவும். தினசரி, நாளின் வெவ்வேறு நேரங்களில் அதைச் சரிபார்த்து, அதைக் கண்காணிக்கவும்.
சோதனைச் சாதனம் சேதமடைவதைத் தடுக்க, உங்கள் சாதனத்தை நேரடி சூரிய ஒளி இல்லாத குளிர், உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil