Fish Curry Recipe in tamil: உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் உணவாக மீன் உள்ளது. இவற்றை குழம்பு, வறுவல், தொக்கு என பல வழிகளில் நாம் ருத்திருப்போம். அப்படி ருசிக்க தெரிந்த நம்மில் பலர் அவை போன்று கண்டிப்பாக ஒரு முறை சமைக்க வேண்டும் என்கிற ஆவல் நம்மிடையே கண்டிப்பாக இருந்திருக்கும். அவை போல சமைக்க சில சமயங்களில் நாமும் முயன்று இருப்போம். அதற்கு சில நேரங்களில் நல்ல தீர்வும் கிடைத்திருக்கும்.
Advertisment
இருப்பினும், மீனில் நம்முடைய வீடுகளில் செய்யப்படும் சைடிஷ் அல்லது குழம்பு போல இருக்காது. அப்படி நம்முடைய வீடுகளில் செய்யப்படும் மீன் குழம்பு போல செய்வதற்கான ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.
மீன் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1/2 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 -15 கறிவேப்பிலை மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன் மிளகாய் பொடி - காரத்திற்கேற்ப மல்லி பொடி - 1 ஸ்பூன் கஷ்மிரி வத்தல் பொடி - 1/4 டீ ஸ்பூன் தேவையான அளவு உப்பு பெரிய எலுமிச்சை அளவு புளி கிளிமூக்கு மாங்காய் ஒரு துண்டு தேங்காய் பால்
Advertisment
Advertisements
இரண்டு பெரிய வெங்காயம் நான்கு நன்கு கனிந்த தக்காளிப் பழங்கள் 6 பல் பூண்டு சிறிதளவு இஞ்சி ஒரு பச்சை மிளகாய் இவற்றை ஒன்றாக நன்கு அரைத்து கொள்ளவும்
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் முதலில் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும். பிறகு கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை பொறிய விடவும். அவை நன்கு பொறிந்த பிறகு பொடியாக வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதக்கும் போதே சிறிதளவு கறிவேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளவும்.
அதன் பிறகு முன்பு அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் கலவையை இப்போது சேர்த்து கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு மூடியால் 10 நிமிடங்களுக்கு மூடி வைத்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். அவை கொதித்த பிறகு, ஊறவைத்துள்ள எலுமிச்சை அளவு புளியை கரைத்து ஊற்றவும். சில நிமிடங்கள் கொதித்த பிறகு, அவற்றுடன் தேங்காய் பாலை சேர்க்கவும்.
இந்த கலவை 2 நிமிடங்கள் கொதித்த பிறகு, முன்பு உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து மீனில் தடவப்பட்ட இருக்கும் மீனை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 5 முதல் 7 நிமிடங்கள் இவற்றை கொதிக்க விடவும். இப்போது நீங்கள் விரும்பிய சுவையில் மீன் குழம்பு தயாராக இருக்கும். இவற்றுக்கு கூடுதல் சுவை சேர்க்க கிளிமூக்கு மாங்காய் ஒரு துண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“