மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயாகப் பக்கவாதம் உள்ளது. ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மருத்துவர் ஜி பிரகாஷின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியன் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
மூளையில் உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் பக்கவாத நோய் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது, மூளை பாதிப்பைக் குறைக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உங்களது அன்றாட வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " இதய நோயும், பக்கவாதமும் நெருங்கிய உறவினர்களைப் போல தான்.
இரண்டும் மரபணுக்கள், சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட தேர்வு (புகைபிடித்தல், உடற்பயிற்சி போன்றவை) ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகின்றன. நம்மில் பெரும்பாலோருக்கு பக்கவாதம் வருமா என்பதை அன்றாட வாழ்க்கை முறையில் தான் முடிவாகுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, தீவிரமான நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை 80 சதவிகிதம் குறைக்கலாம். எந்த மருந்தோ, சாதனமோ அல்லது எவ்வித முறைகளே இந்த அளவிற்கு நோய் பாதிப்பை தடுத்திட முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான ஏழு எளிய வழிமுறைகளை மருத்துவர் பகிர்ந்துள்ளார்.
- உடல் எடை குறைப்பு
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
- கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல்
- நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும்
- புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்
- மது அருந்துவதைக் கட்டுக்குள் வைப்பது
- தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது
மேலும் மருத்துவர் பாவ்சார், "பக்கவாதத்தின் அறிகுறிகளை தெரிந்துகொள்ளவும், உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ பக்கவாதம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான தேசிய பக்கவாதம் சங்கம் உருவாக்கிய ஃபாஸ்ட் என்பதின் அர்த்தத்தை விவரித்துள்ளார்.
Face: சிரிக்கும்போது உங்கள் முகத்தின் ஒரு பக்கம் தொங்கிய நிலையில் காணப்படுகிறதா
Arms: இரண்டு கைகளையும் மேலே தூக்கினால், ஒன்று கீழே சரிகிறதா?
Speech: பேச்சு மந்தமாகவோ அல்லது ஒலி வித்தியாசமாக உள்ளதா
Time: வாழ்க்கையின் சாராம்சம் குறித்தது.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவது இறப்பதற்கான அபாய நிலைமையிலிருந்து உங்களை பாதுகாக்கும்" என்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil