Advertisment

பழங்கள் சாப்பிட்டால் மட்டும் போதுமா - எந்த பழத்தில் என்ன சத்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவக்காடோ முதல் வாழைப்பழம் வரை எந்தெந்த பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, நமது உணவில் முழு பழங்களின் முக்கியத்துவத்தையும் உணவியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fruits

எந்தெந்த பழங்களில் எவ்வளவு ஊட்டச்சத்து - நிபுணர்கள் தகவல்

 பழங்கள் நம் உடலுக்கு ஊட்டம் ,பாதுகாப்பு மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வருகின்றன. இன்று நாம் பொதுவாக உட்கொள்ளும் ஒவ்வொரு பழமும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒன்றை வழங்குகிறது. இருப்பினும், எந்தப் பழத்தில் சில சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அவக்காடோவில் அதிக கொழுப்பு, புரதத்திற்கு கொய்யா, நார்ச்சத்துக்கு ராஸ்பெர்ரி என ஒவ்வொறு பழத்திலும் உள்ள சத்துக்கள் நிபுணர்கள் கூறுவது பற்றி இங்கு பார்ப்போம். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

From avocados to bananas: Dietician reveals which fruits pack the most nutritional punch


கொழுப்புகள் : பெரும்பாலான பழங்களில் கொழுப்பு குறைவாக இருந்தாலௌம் அவக்காடோவில் அதிக கொழுப்பு உள்ளது. 

சர்க்கரைகள் : பிற பழங்களை விட பேரிச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரைகள் அதிகம்.

புரதம் : பழங்களில் பொதுவாக குறைந்த புரதச்சத்து உள்ளது. இருப்பினும், கொய்யாவில் ஒப்பீட்டளவில் அதிக புரதம் இருப்பதாக கூறுகின்றனர்.

நார்ச்சத்து : சப்போட்டா மற்றும் கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, உணவுத் தேவைகளுக்கு நல்ல ஆதாரமாகவும் உள்ளது.

ஆக்ஸிஜனேற்றிகள் : பெரும்பாலான பழங்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இருப்பினும் குறிப்பிட்ட கலவைகள் வேறுபடுகின்றன.

வைட்டமின் சி : கிவி பழத்தில் வைட்டமின் சி உள்ளது. ஆனால் நெல்லிக்காய், கொய்யா மற்றும் சீதாப்பழம் போன்ற இந்திய பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

வைட்டமின் ஏ : பப்பாளி, பேரீச்சம்பழம் மற்றும் தர்பூசணி, மாம்பழங்களில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

பொட்டாசியம் : மலிவு விலை மற்றும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இதேபோல திராட்சை, கொய்யா மற்றும் மாதுளையிலும் அதிக பொட்டாசியம் சத்து உள்ளது.

பழங்களில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை இனிப்புகளுக்கு இயற்கையாகவே இனிப்பு மாற்றாகும், இனிப்புப் பலரை ஈர்க்கும். வைட்டமின்கள் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன . அவக்காடோ பழத்தில் உள்ள கொழுப்புகள் தாவர அடிப்படையிலானவை மற்றும் இதய ஆரோக்கியத்தை சாதகமாக பாதிக்கும். பழங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது, மற்றும் நார்ச்சத்து எடை நிர்வாகத்தை ஆதரிக்கிறது.

பழங்களாக இருந்தாலும் பதப்படுத்தப்பட்டதை எடுத்துக்கொள்ள கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இயற்கை உணவுகள் பொதுவாக ஆரோக்கியத்திற்கு சிறந்தது, ஏனெனில் செயற்கை சேர்க்கைகள், இனிப்புகள் மற்றும் வண்ணங்களில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. வாழைப்பழங்கள், ஆரஞ்சு அல்லது பெர்ரி போன்ற எளிதில் கிடைக்க கூடிய பழங்களை அதிகம் எடுத்து கொள்ளலாம். ஆம்லா அல்லது இந்திய ஜூஜூப் போன்ற உள்ளூர் மற்றும் பருவகால பழங்களையும் அதிகம் உண்ணலாம். ஏனெனில் அவை மிகவும் மலிவு மற்றும் பருவகாலங்களில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும்.  

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

health fruits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment