/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-17T155446.944.jpg)
Fried Rice Recipe in tamil: நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி மீதம் ஆகிவிடுகின்றன. இவற்றில் சிலவற்றை நாம் ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் அல்லது அடுத்த வேளைக்கு சாப்பிட்டு விடுகிறோம். சில உணவுகளை குப்பையில் கொட்டிவிடுகிறோம். ஆனால், இப்படி மீதமாகும் உணவுகளை சில வீடுகளில் வேறு ஒரு உணவாக அல்லது சைடிஷ் ஆக தயார் செய்து ருசிக்கிறார்கள்.
மீதமாகும் உணவுகளை வேறு ஒரு ருசியான உணவாக மாற்ற தற்போது பல செய்முறைகள் வந்து விட்டன. அவற்றில் சில முக்கிய செய்முறைகளை நாங்கள் எங்கள் இணைய பக்கத்தில் அன்றாட பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், இன்று மீந்துபோன அரிசி சாதத்தில் எப்படி டேஸ்டியான ஃப்ரைட் ரைஸ் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நம்முடைய வீடுகளில் மிக முக்கிய உணவாக இருக்கும் இந்த அரிசி சாதம் மீந்து போகும் பட்ச்சத்தில், அவற்றை சுவையான வெஜ் ஃபிரைடு ரைஸ் அல்லது சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ஆக மாற்றி சுவைக்கலாம். ஃபிரைடு ரைஸ்களில் தற்போது பல வகையில் உள்ள நிலையில், இன்று பன்னீர் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி எப்படி எளிதில் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-17T160416.030.jpg)
பன்னீர் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
பன்னீர் ஃப்ரைடு ரைஸ் செய்யத் தேவையான பொருட்கள்:
சதாம் - 1/2 கப்
பன்னீர் - 100 கிராம் (சதுரமாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
கேப்சிகம் - 2 டேபிள் ஸ்பூன்
கேரட் - பீன்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
கருப்பு மிளகு தூள் - 1/2 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீ ஸ்பூன்
எண்ணெய்
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-17T160319.937.jpg)
பன்னீர் ஃப்ரைடு ரைஸ் சிம்பிள் செய்முறை:
முதலில் பன்னீரை நன்றாக சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். அவற்றை எண்ணெயில் இட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறகு அவற்றை தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே எண்ணெயில் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, முன்னர் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அவற்றுடன் வெங்காயம், கேப்சிகம், கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் உப்பு, கருப்பு மிளகு தூள், சிவப்பு மிளகாய் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக மீந்துள்ள சாதத்தை எடுத்து அவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
5 நிமிடங்கள் கழித்து பார்த்தல் டேஸ்டியான பன்னீர் ஃப்ரைடு ரைஸ் தயராக இருக்கும். அவற்றின் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.
இப்போது சூடாக இருக்கும் பன்னீர் ஃப்ரைடு ரைஸ் உடன் உங்களுக்கு பிடித்த சைடிஷ் சேர்த்து ருசித்து மகிழலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-17T160331.233.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.