health tips tamil: நம்முடைய அன்றாட உணவில் போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கணிசமாக பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள அதே அளவு சத்துக்கள் அவற்றின் தோல்களிலும் உள்ளன. ஆனால், நம்மில் பலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றின் வெளிப்புற தோலை நீக்கிவிடுகிறோம். மேலும், அவற்றின் தோல் மற்றும் விதைகளை குப்பையில் வீசி விடுகிறோம்.
சிலவகை பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் அவற்றின் தோல் மற்றும் விதைகளில்தான் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அவை உடலுக்கு ஏராளமான அற்புத நன்மைகளைத் தருகின்றன.
இப்போது எந்தெந்த காய்கறி, பழ தோல்களில் என்னென்ன சத்துக்கள் மற்றும் என்ன பயன்கள் உள்ளது என்று இங்கு பார்க்கலாம்.
காய்கறி தோலில் உள்ள பயன்கள்:
கேரட் தோல் கரையாத நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது, மற்றும் வயிற்று இதமளிக்கிறது.
பீர்க்கங்காய் தோலில் வைட்டமின் ஏ, பி 2, பி 3 மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கின்றன.
உருளைக்கிழங்கு தோலில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் சி உள்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன.
பூசணி தோலில் ஆன்டிஆக்சிடென்டுகள், பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளன. அவை விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து சருமத்திற்கு பொலிவும் சேர்க்கும்.
பழங்களின் தோலில் உள்ள பயன்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் தோல்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால் அவை உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.
ஆரஞ்சு பழ தோல்களில் இருக்கும் பிளவனாய்டுகள், நார்ச்சத்துகள், மெக்னீசியம் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கின்றன. மேலும், புற்றுநோயை தடுக்கும் தன்மையும் கொண்டவையாகவும் உள்ளன.
ஆப்பிள் தோலில் பாலிபினாலும், முலாம்பழ தோலில் பலவகை வைட்டமின்கள், புரதங்களும் உள்ளன.
வாழைப்பழ தோலில் வைட்டமின் பி 6, பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கின்றன.
சமையலில் காய்கறி, பழ தோல்கள்:
காய்கறி தோல்கள் நம்முடைய அன்றாட சமையலிலும் பயன்படுத்ததப்படுகிறது. வட இந்திய மக்கள் தர்ப்பூசணி தோலை பயன்படுத்தி அல்வா தயாரிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள்.
தென்னிந்தியாவில் பூசணி, பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி சட்னி, குழம்பு தயாரிக்கும் நடைமுறை இருக்கிறது.
பூசணி விதை ஆரோக்கியமான உணவு வகையை சேர்ந்தது. இவற்றில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகம் உள்ளன. சாலட், தின்பண்டங்கள், இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பில் அவை சேர்க்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.