How to make crisp ghee roast dosa in tamil: கிரிஸ்பி நெய் தோசைக்கு மிக முக்கியமானது மாவு தான். தோசைக்கென தனியாக மாவு அரைக்கும் போது அரிசி மற்றும் உளுந்து அளவை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இவற்றில் இட்லி பிரியர்கள் அவை சூடாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதே வேளையில் தோசை பிரியர்கள் நன்றாக மொறு மொறுவென்று இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அதிலும் குறிப்பாக மக்கள் எதிர்பார்ப்பது மொறு மொறு நெய் தோசை தான்.
Advertisment
இந்த ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு நெய் தோசையை வீட்டில் இருக்கும் குழம்பு மற்றும் சட்னி வகைகைகளுடன் சேர்த்து சுவைத்தல் செம டேஸ்டியா இருக்கும். எனினும், நம்முடைய வீடுகளில் நாம் சுடும் தோசை சில சமயங்களில் முறுகலாக வராது. அப்படி வர பெரிய மாயா வித்தை ஒன்றும் தேவை இல்லை. இங்கு கீழே நாம் பார்க்கவுள்ள சில சீக்ரெட்ஸ்களே போதுமானது. அப்படி என்ன தான் ரகசியம் உள்ளது என்று பார்ப்போமா?…
கிரிஸ்பி நெய் தோசை சீக்ரெட்ஸ்:
கிரிஸ்பி நெய் தோசைக்கு மிக முக்கியமானது மாவு தான். தோசைக்கென தனியாக மாவு அரைக்கும் போது அரிசி மற்றும் உளுந்து அளவை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முறுகலான தோசை சுட இந்த 3 சீக்ரெட்ஸ் மிக முக்கியம் ஆகும்.
அதில் முதலாவது தோசை கல்லின் சூடு. கல்லின் சூட்டை சரியாக கவனித்து வருவது முக்கியமான ஒன்றாகும்.
இரண்டாவது கல்லில் கரண்டியால் ஊற்றும் மாவின் அளவு. கல்லில் எவ்வளவு கரண்டி மாவு ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுதல் மிக முக்கியம் ஆகும்.
மூன்றாவதாக, மாவை முடிந்த அளவிற்கு கல்லில் சுழற்றுவது.
கரண்டியால் நாம் சரியான அளவு மாவை எடுத்த பிறகு அவற்றை நல்ல கரண்டியை கொண்டு கல்லில் நன்கு சுழற்ற வேண்டும். அப்போது நமக்கு மொறு மொறு தோசை கிடைப்பது நிச்சயம்.
மாவை நன்கு சுழற்றிய பிறகு நெய்யை அதில் சேர்த்து அதே மேலோட்டமாக கரண்டியால் நாம் சுழற்றி தேய்க்கும் போது நமக்கு சுவைமிகுந்த மொறுமொறு தோசை கிடைக்கும்.
இவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil