/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-12T165538.870.jpg)
Ginger thogayal in tamil: நாம் தவற விட்டுக் கொண்டிருக்கும் பாரம்பரிய உணவுகளில் துவையலும் ஒன்று. 30 ஆண்டுகளுக்கு முன்பு துவையல் இல்லாத சாப்பாடு இருக்காது. இந்த அற்புதமான துவையல்கள் நம்மை அதிகம் சாப்பிட ஊக்குவிப்பதோடு நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குக்குகின்றன.
அந்த வகையில் இஞ்சி துவையல் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய உணவுப்பொருளாக உள்ளது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாக இஞ்சி செயல்படுகிறது. இஞ்சி புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன.
இப்படி நிறைய நற்பயன்களை கொண்டுள்ள இஞ்சியில் எப்படி துவையல் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-2021-07-06T194252.793.jpg)
இஞ்சி துவையல் செய்யத் தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
200 கிராம் -இஞ்சி (துண்டாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 100 கிராம்.
புளி – 50 கிராம்
தாளிக்க
நல்லெண்ணெய் – 250 மில்லி
கடுகு – 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு
வெல்லம் – 1 ஸ்பூன்
இஞ்சி துவையல் சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு காடாய் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு அதில் துண்டாக நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு அவற்றோடு, காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இந்த கலவை நன்றாக ஆறிய பிறகு மிக்சியில் பேஸ்ட் போல அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சூடானதும் ஒன்றன் பின் ஒன்றாக இட்டு தலித்துக்கொள்ளவும்.
பிறகு முன்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை சேர்க்கவும். அவை நன்றாக கொதிக்க ஆரம்பமாகும் போது அவற்றோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
தொடர்ந்து கொதிக்க விடும் போது துவையல் திக்கான நிறத்திற்கு மாறி கெட்டியாக வரும். அதுவரை அவற்றை கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் வெல்லம் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு கீழே இறக்கவும்.
நாம் கொதிக்க வைத்து கிளறி இஞ்சி துவையல் நன்றாக சுண்டி வந்தவுடன் அவற்றை ஆற வைத்து ஒரு டாப்பாவில் அடைத்து சுமார் 1 மாதத்திற்கு பயன்படுத்தலாம். அவ்வப்போது சூடு செய்து கொண்டால் சாப்பாட்டுக்கு கூடுதல் சுவை தரும்.
இந்த மழை காலத்தில் நீங்கள் சுடசுட தயார் செய்யும் போது இந்த சுவைமிகுந்த இஞ்சி துவையலையும் சேர்த்துக்கொள்ளலாம். இதேபோல் சூடான இட்லி, தோசை, அடை போன்ற உணவுகளுடனும் சேர்த்து பரிமாறி ருசிக்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-2021-07-06T194345.607.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.