சப்பாத்தி - பச்சைப் பயறு காம்பினேஷன்: ஒரு முறை இதை டேஸ்ட் பாருங்க!
Pachai payaru Kurma in tamil: நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பச்சைப் பயறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
Pachai payaru Kurma in tamil: நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பச்சைப் பயறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
Pachai payaru recipes in tamil: நாம் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி காணப்படுவது போல், நம்முடைய உணவுகளில் சேர்க்கப்படும் பயிறு வகைகளிலும் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக பச்சைப் பயறில் உடலுக்கு ஊட்டம் தரும் புரசத்துகள் அதிகமாக உள்ளது.
Advertisment
நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பச்சைப் பயறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இந்த அற்புதமான பயறை வெறுமனே வேக வைத்து குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
தவிர, இவற்றில் தயார் செய்யப்படும் குருமா தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதம் என அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
சரி, இப்போது இந்த ருசியான ரெசிபியை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம்.
Advertisment
Advertisements
பச்சைப் பயறு குருமா தேவையான பொருட்கள்:-
பச்சை பயிறு - 1/2 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பயறு குருமாசெய்முறை:-
முதலில் ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வேக வைக்கவும்.
பின்னர், மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இவற்றுடன் முன்னர் வேக வைத்த பயறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்.
இந்த கலவை ஓரளவு சுண்டிய பிறகு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி கீழே இறக்கவும்.
இப்போது சுவையான மற்றும் ருசியான சப்பாத்தி குருமா தயாராக இருக்கும்
பச்சைப் பயறின் ஆரோக்கிய நன்மைகள்:-
கர்ப்பிணி பெண்கள் தினமும் முளைகட்டிய சிறுபயிறு சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு அளவாக கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பும். சமயத்தில் பேதி கூட ஆகலாம். இரவு நேரத்தில் பச்சை பயிறு தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இவை வாயுவை உற்பத்தி செய்யும். ஜீரண சக்தி குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை, சீறுநீரகப் பாதிப்பு கொண்டவர்கள் மிக குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.