மழை சீசனில் தலை முடியை பராமரிப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க!

Best Hair Care Tips: முடியைக் காப்பாற்ற இலைகளால் ஆன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

Monsoon Hair Care Tips : பருவமழை காலத்தின் போது உங்கள் தலைமுடியை நிர்வகிக்க கடினமாக உள்ளதா?மழைகாலத்தின் போது அதிக அளவு ஈரப்பதம், சுருள் முடியை கடினமாக்குகிரது மற்றும் சுருள் முடி உள்ள பெண்கள் அதை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக தான் இந்த சிறப்பு பகிர்வு.

தலைக்கு அடிக்கடி குளிக்க வேண்டும். காற்றின் ஈரப்பதத்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு உருவாகும். இதனால் முடி வேர்களில் வலுகுறையும்.

Hair care tips:

ஆண்டி-பாக்டீரியா ஷாம்புக்களை முடிக்கு உபயோகிக்கவும். இதனால் பூஞ்சை, பாக்டீரிய தொற்றில் இருந்து பாதுகாக்கலாம். மழை நீர் அழுக்கடைந்து, அமிலத் தன்மை கொண்டது. இதிலிருந்து முடியைக் காப்பாற்ற இலைகளால் ஆன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். இவை முடியை கவசம் போன்று பாதுகாக்கும்.

முடி ஈரமாக இருக்கும் போது, இறுகக் கட்டிக் கொள்ளக் கூடாது. இது முடி உதிர்வு மற்றும் கெட்ட நாற்றத்திற்கு வழிவகுக்கும். நறுமணமிக்க வாசனை திரவியங்கள் மூலம், நாற்றத்தை தவிர்க்கலாம்.முடி ஈரப்பதமாக இருந்தால், துண்டை அதிக அழுத்தத்துடன் பயன்படுத்தக் கூடாது. இது முடியை சேதமாக்கிவிடும். அதற்கு பதிலாக, தலையில் துண்டை கட்டி சிறிது, சிறுதாக ஈரப்பதத்தை நீக்கலாம்.

ஈரப்பதமிக்க முடி சேதமடைவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே முடி காயும் வரை, சீப்பை பயன்படுத்தக் கூடாது. மழைகாலத்தில் ஒரு நல்ல கண்டிஷனர் உங்களுடைய நல்ல நண்பன். உங்கள் முடியை பட்டு போலும் மற்றும் சுருள் இல்லாமலும் இருக்க வழக்கமாக கண்டிஷன் செய்யுங்கள்.

தலைக்கு குளிக்க முடிந்த வரை வெந்நீரை தவிர்த்திடுங்கள். உங்கள் முடிகளை மட்டுமாவது குளிந்த நீரால் அலசுங்கள். இது உங்கள் முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது. மேலும் நீங்கள் குளித்து முடித்த உடன், தலை முடியை நன்கு உலர்த்துவது அவசியம்.

உடல் எடையைக் குறைக்கும் திரிகோணாசனம்!

கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close