ஜனவரி 1-ல் ஏன் புத்தாண்டு கொண்டாட்டம்? வரலாறு முக்கியம் பாஸ்!

New Year History and Significance: பல்லாயிரக்கணக்கான மக்கள், மதங்கள், நாகரீகம் என பல்வேறு தரவுகளால் வேறுபட்டு உள்ள மக்கள், இந்த புத்தாண்டு தினத்தை மட்டும்...

Happy New Year 2020: இன்னும் சில மணிநேரங்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. நவீன கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில், ஜனவரி 1ம் தேதியே,ஆண்டின் முதல்நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில், எல்லா நாடுகளும் இந்த ஒரு நாளை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டிய அவசியம் என்ன என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா?.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

பல்லாயிரக்கணக்கான மக்கள், மதங்கள், நாகரீகம் என பல்வேறு தரவுகளால் வேறுபட்டு உள்ள மக்கள், இந்த புத்தாண்டு தினத்தை மட்டும் ஒரேமாதிரியாக எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? புத்தாண்டு தின கொண்டாட்டங்கள், உறுதிமொழிகள், வாணவேடிக்கைகள், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்கள் எல்லாம் எவ்வாறு ஒரேமாதிரியாக உள்ளன .

ஹேப்பி நியூ இயர் ஃப்ரெண்ட்ஸ்… இந்த படங்களுடன் வாழ்த்துகளை பகிருங்கள்!

புத்தாண்டை சுற்றுலாவோட துவங்க ரெடியா சென்னை மக்காஸ் : அதுவும் டீ காசுல, டீக்கா டிரஸ் பண்ணிட்டு வாங்க…

புத்தாண்டு, புத்தாண்டு தின கொண்டாட்டம் குறித்த வரலாறு, அதன் முக்கியத்துவம், ஒரே நாளில் கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் காண்போம்…

புத்தாண்டு கொண்டாட்டங்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. பாபிலோன் ஆட்சிக்காலத்தில், சம இரவு மற்றும் பகல் வேளைகள் கொண்ட மார்ச் மாதத்தின் உத்தராயண நாளில் இருந்தே புத்தாண்டு பிறந்து வந்துள்ளது. இந்த காலத்தில், வருடத்திற்கு கூடுதலாக 90 நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர், சூரியனை அடிப்படையாக கொண்டு ரோமன் காலண்டர் உருவாக்கப்பட்டது. இந்த ஜூலியன் காலண்டர், கிட்டத்தட்ட தற்போதைய கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. பின்னர், அது உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரிகோரியன் காலண்டரின்படி, ஜனவரி 1ம் தேதி, புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரோமானியர்களின் முழுமுதற்கடவுளான ஜானஸை கவுரவிக்கும் விதத்தில், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. ஜானஸ் கடவுளுக்கு இரண்டு முகங்கள். ஒரு முகம் கடந்த காலத்தையும், மற்றொரு முகம் எதிர்காலத்தை குறிப்பிடுவதாக ரோமானியர்கள் நம்புகின்றனர். இந்த நாளில், ரோமானியர்கள், ஜானஸ் கடவுளின் தியாகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். தங்கள் வீட்டை வண்ணமயமாக அலங்கரிப்பதோடு மட்டுமல்லாது, நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகளை வழங்கி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மத்திய ஐரோப்பாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களில் அவர்கள் சார்ந்த மதங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறித்தவ மதத்தினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வந்தனர். 1582ம் ஆண்டில், 13ம் போப் கிரிகோரி, ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில், புத்தாண்டு கொண்டாட்டம், டிசம்பர் 31ம் தேதியே துவங்கி, ஜனவரி 1ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நாளில், தங்களுக்கு பிரியமானவர்களை சந்தித்தல், பார்ட்டிகளில் கலந்துகொள்ளுதல், விளையாடி மகிழ்தல், புத்தாண்டு கொண்டாட்டங்களில் திளைத்தல் என மக்கள் இந்த நாளை, உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு இடங்களில் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close