Health benefits of ajwain in Tamil: நமது சமையல் அறையில் உள்ள சில எளிய மசாலாப் பொருட்கள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் அளவு சிறியதாக இருக்கலாம், விலை மலிவாக இருக்கலாம், ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதில் உயர்ந்தவை. அத்தகைய மசாலாப் பொருட்களில் ஒன்று ஓமம். இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
உணவில் மணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படக் கூடிய மசாலாப் பொருட்களில் ஒன்று இந்த ஓமம். இது 2000 ஆண்டுகளாக இயற்கை மருந்தாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓமத்திற்கு மருந்தியல் பண்புகள் உள்ளன. இதில், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதம், ஃபைபர், டானின்கள், கிளைகோசைடுகள், ஈரப்பதம், சபோனின்கள், ஃபிளாவோன் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், தாமிரம், அயோடின், மாங்கனீசு, தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த உள்ளடக்கங்கள் அனைத்தும் இந்த சிறிய விதையை ஒரு ஆரோக்கிய அதிசயமாக்குகின்றன.
ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ஓமம் தண்ணீர், குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் எனும் கடுமையான வயிற்று வலியை குறைக்க உதவுகிறது.
ஓமத்தை வெல்லத்துடன் சேர்த்து இடித்து சாப்பிட செரிமான கோளாறுகள் நீங்கும். மேலும் உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும்.
சிறிது ஓமத்தை வாயில் போட்டு நன்றாக மென்று தின்றால் உங்கள் வாயுத் தொல்லை நீங்கும். இவ்வாறு மென்று தின்ற பின்னர் கொஞ்சம், வெந்நீர் குடித்தால் வயிறு பொருமல் நீங்கும்.
ஒரு மெல்லிய துணியில் கொஞ்சம் ஓமத்தை முடித்து நுகர்ந்து வர, சளித்தொல்லை நீங்கும்.
ஓமத்திலுள்ள தைமால் என்ற வேதிப்பொருள் இருமலை ஏற்படுத்தும் தொற்றுக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது. இது இருமல் மற்றும் மூக்கடைப்பை குணப்படுத்தும்.
ஓமம் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை குணமாக்கும் திறன் உடையது. அதேநேரம் இடைநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கவும் ஓமம் உதவுகிறது.
ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.
ஓமத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து, லேசாக வறுத்து பின்னர் மைய அரைத்து குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
ஓமத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து பற்றிட, ஒற்றை தலைவலி குணமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.