Health benefits of Asafoetida in Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டே நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அத்தகைய எளிய மசாலாப் பொருட்களில் ஒன்றான பெருங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
அசாஃபோடிடா அல்லது பெருங்காயம் மிகவும் சுவையான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பெருங்காயம் அநேகமாக அனைத்து வீடுகளிலும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் உணவில் சுவையைச் சேர்ப்பதை பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் அதிக கவனத்தைப் பெறுவதில்லை.
பெருங்காயம் பல்வேறு சைவ உணவுகள் மற்றும் கறிகளில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் அற்புதமான வாசனை மற்றும் சுவையானது, உணவுகளுக்கு அருமையான சுவையை அளிக்கிறது. ஒரு சிட்டிகை பெருங்காயம் உங்கள் உணவை மாற்றும் அல்லது உணவின் சுவையை உயர்த்தும். அதேநேரம், பெருங்காயம் வாய்வு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, பெருங்காயம் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, செரிமான அமைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரைக்கு உதவும் பல நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெருங்காய நீரை முயற்சிக்கலாம். அரை ஸ்பூன் பெருங்காயத்தை தூள் வடிவில் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உங்கள் எடை குறைப்புக்கு உதவும். அதேநேரம் உடல் எடையை குறைக்க உதவுவதால், நீங்கள் பெருங்காய நீரை நாள் முழுவதும் உட்கொள்ள கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறை, அதுவும் அதிகாலையில் வெறும் வயிற்றில் பெருங்காய நீரைக் குடிப்பது நல்லது. மேலும் பெருங்காய தூளின் அளவை அதிகரிக்கக் கூடாது, ஏனெனில் இது வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வு போன்ற செரிமான தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். நீண்ட காலத்திற்கு அளவுக்கு அதிகமாக பெருங்காயம் உட்கொள்வதால், உதடுகள் வீக்கம், தோல் வெடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் பெருங்காயம் அளவு குறித்து கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: முட்டைகளை சரியான முறையில் வேகவைத்து தோலுரிப்பது எப்படி?
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
பெருங்காயம் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, அதாவது உங்கள் உடல் ஆற்றலுக்காக உணவை எரிக்கும் விகிதத்தை மேம்படுத்துகிறது. எனவே, நீங்கள் சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க முடியும்.
செரிமானத்திற்கு உதவுகிறது
ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஆரோக்கியமான மற்றும் விரைவான எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பெருங்காயம் சீரான செரிமானத்தை உறுதி செய்கிறது, மேலும் இது செரிமான அமைப்பிலிருந்து நச்சுகளை நீக்குகிறது, மேலும், சரியான செரிமான செயல்பாட்டை உறுதி செய்கிறது.
இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது
ஒழுங்கற்ற இரத்த சர்க்கரை அளவு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இது உங்களுக்கு பசியை உண்டாக்கும் அல்லது அடிக்கடி மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும், மேலும் எடை இழப்பைத் தடுக்கும். அதேநேரம், பெருங்காயம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே பெருங்காயம் எடுத்துக் கொள்வதால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்து, உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil