scorecardresearch

வெற்றிலை, வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு கிளாஸ்… இவ்வளவு நன்மை இருக்கு!

செரிமான பிரச்சனைகள், தலைவலி, வலி நிவாரணி; வெற்றிலையின் நன்மைகளை இங்கு பார்ப்போம்.

Health benefits of Betel Leaves in Tamil: சிலருக்கு கல்யாண வீடுகளில் சாப்பிட்டு விட்டு வெற்றிலை போட்டால் தான் திருப்தி அடையும். வெற்றிலை இந்திய உணவு கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பகுதி மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாகவும் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிலையானது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெற்றிலையில் வைட்டமின் சி, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். வெற்றிலையை தொடர்ந்து உட்கொள்வது மனித உடலின் வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று ஆயுர்வேதம் நம்புகிறது. இது ஒரு வலுவான, காரமான மற்றும் நறுமண சுவை கொண்டது மற்றும் வாய் புத்துணர்ச்சியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

செரிமானத்தை மேம்படுத்தும்

வெற்றிலையின் கார்மினேடிவ், வாயு எதிர்ப்பு மற்றும் காஸ்ட்ரோப்ரோடெக்டிவ் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வெற்றிலை உடலுக்கு தேவையான அத்தியாவசிய எண்ணெயை வயிற்றில் இலகுவாக்குகிறது, ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவும் செரிமான அமிலங்களை உடலுக்குள் சுரக்க உதவுகிறது. வெற்றிலை சாற்றுடன் சிறிது மிளகு கலந்து சாப்பிடலாம். இதை வடிகட்டி, குழந்தைகளுக்கு இந்த கலவையை இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்க, அவர்களின் செரிமானத்தை அதிகரிக்கும்.

இரைப்பை வலியைக் குறைக்கும்

வெற்றிலைகள் உடலில் உள்ள PH அளவைப் பராமரிக்க உதவுகின்றன, தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நச்சுப் பொருட்களிலிருந்து இரைப்பையை பாதுக்காக்கிறது.

மலச்சிக்கலுக்கு தீர்வு

வெற்றிலைகளை மென்று சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது. வெற்றிலையை வெதுவெதுப்பான நீருடன் மென்று வர மலச்சிக்கல் தீரும்.

பசியை தூண்டும்

ஒரு நாளைக்கு ஒரு வெற்றிலையை உட்கொள்வது உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றுவதன் மூலம் வயிற்றின் சாதாரண pH அளவை மீட்டெடுக்க உதவுகிறது. எனவே, இது பசியை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தலைவலிக்கு தீர்வு

தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, வெற்றிலையில் உள்ள வலி நிவாரணி மற்றும் குளிர்ச்சியான பண்புகள் காரணமாக, வெற்றிலை ஒரு சரியான தீர்வாகும். தலைவலியைப் போக்க வெற்றிலையை இடித்து நெற்றியில் தடவலாம்.

வலி நிவாரணி

வெற்றிலையின் வலி நிவாரணி பண்புகள் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு சில இலைகளை நசுக்கி, அதை காயங்கள் அல்லது தொற்றுநோய்களின் மீது தடவவும். இது காயங்கள், வெட்டுக்காயங்கள், கீறல்கள் போன்றவற்றை ஆற்றும். வெற்றிலையை மென்று சாப்பிடுவது உள் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

மந்தத் தன்மையை போக்கும்

நீங்கள் மந்தமாக உணர்ந்தால், விழிப்புணர்வை மேம்படுத்த வெற்றிலை ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு டீஸ்பூன் வெற்றிலை சாற்றுடன் ஒரு துளி தேன் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். இது மன செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் பலவீனத்திற்கு சிகிச்சையளிக்கிறது.

இருமல் நீங்கும்

வெற்றிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் நன்மை நிரம்பியுள்ளது, இது தொடர்ந்து இருமலைக் குறைக்க உதவுகிறது. வெற்றிலையில் உள்ள இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சளியை எளிதாக்குகிறது மற்றும் இருமல் காரணமாக ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.

வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வெற்றிலை எண்ணெய் பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் வெற்றிலை சாறை கலந்து தினமும் காலை மற்றும் இரவு வாய் கொப்பளிக்க வேண்டும்.

முகப்பருவை குணப்படுத்தும்

வெற்றிலையின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பருக்கள் இல்லாத, மிருதுவான சருமத்தை நமக்கு வழங்க உதவும். இது தோல் ஒவ்வாமை, சொறி, வெயில், தோல் புண், அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் ஆகியவற்றைத் தடுக்கிறது. மஞ்சளுடன் வெற்றிலையை நசுக்கி சாறு கலந்து முகத்தில் தடவினால் பல்வேறு தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health benefits of betel leaves in tamil