Advertisment

பெண்களுக்கு சுகர் பிரச்னை? வேர்க்கடலை தரும் நன்மையை பாருங்க!

இதய ஆரோக்கியம், நீரிழிவு நோய் தடுப்பு, பித்தப்பை கல் தடுப்பு போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு வேர்க்கடலையின் நன்மைகள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெண்களுக்கு சுகர் பிரச்னை? வேர்க்கடலை தரும் நன்மையை பாருங்க!

Health benefits of Ground nuts in Tamil: நம்மிடம் இருக்கும் சில எளிய உணவுப் பொருட்கள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும். ஆனால் நாம் அவற்றை தவிர்த்து விலை அதிகம் உள்ள பிற உணவு பொருட்களை உட்கொள்வதை விரும்புவோம். அதேநேரம் இந்த எளிய உணவுப் பொருட்கள் நமது பட்ஜெட்டுக்குள் அடங்கி, நமக்கு சுவையை அளிப்பதோடு, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அத்தகைய எளிய உணவுப் பொருட்களில் ஒன்று வேர்க்கடலை.

Advertisment

வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மற்ற பருப்பு வகைகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைந்தது. இதனை இனிப்பு மற்றும் கார உணவுகளில் சேர்க்கலாம். மேலும் வேகவைத்த கடலை, வறுத்த கடலை, கடலைமிட்டாய் போன்ற பல்வேறு வடிவங்களில் உட்கொள்ளலாம். அத்தகைய வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?

வேர்க்கடலையில், ஐசோஃப்ளேவோன்கள், ரெஸ்வெராட்ரோல் மற்றும் பைடிக் அமிலங்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பயோட்டின் (கர்ப்பத்திற்கு முக்கியமானது), தாமிரம், நியாசின், ஃபோலேட், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் தயமின் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளன.

இதய ஆரோக்கியம்

வால்நட்ஸ் மற்றும் பாதாம் போன்ற பல்வேறு பருப்புகள் இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள். அதேநேரம், விலை மலிவாக கிடைக்கக் கூடிய வேர்க்கடலையும் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. இவை சிறிய இரத்தக் கட்டிகள் உருவாக்குவதைத் தடுக்கின்றன, இதனால் உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

பித்தப்பை கல் தடுப்பு

வேர்க்கடலை உட்கொள்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது

வேர்க்கடலை குறைந்த கிளைசெமிக் உணவாகும், அதாவது அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. இது பெண்களுக்கு டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எடை குறைப்பு

வேர்க்கடலையில், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அவை எடை அதிகரிப்பதற்கு பங்களிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகினறனர். உண்மையில், வேர்க்கடலை சாப்பிடுவது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

வேர்க்கடலை நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருப்பதால், இது முழு உணவாக திருப்தி அளிக்கிறது மற்றும் இதனுடன் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது

வயதானவர்கள், கடலை மிட்டாய் சாப்பிடுவது இரைப்பை அல்லாத அடினோகார்சினோமா எனப்படும் சில வகையான வயிற்று புற்றுநோயைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இது உலகெங்கிலும் உள்ள பொதுவான ஒவ்வாமைகளில் ஒன்றாகும், எனவே உங்கள் முகத்தில் குமட்டல் அல்லது வீக்கத்தை உணர்ந்தால் கவனமாக இருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Health Tips Health Benefits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment