நாம் உணவில் பயன்படுத்தும் புதினா இலைகள் செரிமானத்திற்கு உதவுகிறது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சளி மற்றும் பலவற்றிற்கு சிகிச்சையளிக்கிறது. இப்படியான புதினாவின் மேலும் பல நன்மைகளை பார்ப்போம்.
புதினா இலைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளதால் வயிற்று தசைகளை இலகுவாக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. இது வயிற்றுச் சூட்டை தணிக்கிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. சமோசாவுடன் வழங்கப்படும் புதினா சட்னி நமக்கு சுவைக்கு மட்டுமல்லாமல் நன்கு செரிமானப்படுத்தவும் உதவுகிறது.
புதினா இயற்கையாகவே உடல் வெப்பத்தை தணிக்க உதவும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது. எனவே இது பெரும்பாலும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் வெப்பநிலை உயர்வைக் குறைக்கும்.மேலும் புதினா இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது
நமது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதினா உதவுகிறது. இது கிருமி நாசினி குணங்களை கொண்டிருப்பதால் விரைவாக சுவாசத்தை புதுப்பிக்கிறது. இது வாய்க்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமூம் நாக்கு மற்றும் பற்களை சுத்தம் செய்வதன் மூலமூம் வாய் ஆரோக்கியத்தை பேணுகிறது.
அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு தீர்வளிக்கிறது. மேலும் உடலில் பூசிக்கொள்ளும்போது பூச்சி கடித்தல் சொறி அல்லது பிற எதிர்விளைவுகளால் பாதிக்கப்பட்ட சருமத்தின் எரிச்சலை குறைக்கும் மற்றும் குளிர்விக்கும்,
புதினா வாயு தொல்லை, அஜீரணம், வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
வீக்கம், வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல் போன்ற பாதிப்புகளை உடைய நபர்கள் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு பிறகு இருந்தால் புதினா உட்கொள்வது நல்ல தீர்வாக அமையும். புதினா இலைகளை தண்ணீரில் ஊறவைத்த பிறகு உட்கொள்ளலாம். அல்லது இலைகளிலிருந்து சாறு எடுத்து பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil