scorecardresearch

நிறைய விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி… மஞ்சளை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

Health benefits of turmeric, immunity, vitamins: இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமான மஞ்சள் அதிசய மசாலா என்று அழைக்கப்படுகிறது. மஞ்சளை பழங்காலத்திலிருந்தே ஒரு மருத்துவ மூலிகையாக இந்தியாவில் பயன்படுத்தி வருகிறோம்.

நிறைய விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி… மஞ்சளை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

நமது சமையலறையில் உள்ள ஒரு மசாலாப் பொருள், நமக்கு ஊட்டச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது என்றால் நம்புவீர்களா? ஆம், நமது சமையலறையில் உள்ள மஞ்சள் தூள் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமான மஞ்சள் அதிசய மசாலா என்று அழைக்கப்படுகிறது. மஞ்சளை பழங்காலத்திலிருந்தே ஒரு மருத்துவ மூலிகையாக இந்தியாவில் பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலான இந்திய உணவு வகைகளில் மஞ்சள் தவறாமல் இடம் பிடிக்கிறது.

உலர் மஞ்சளில் வைட்டமின் ஏ, தயாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (பி 2), வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளன.

சமீபத்தில் மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றது. மஞ்சளில் உள்ள ’கர்குமினாய்டுகள்’ பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மஞ்சளின் நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஆரோக்கிய நன்மைகளின் கூடாரம்

மஞ்சள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பொருளாகும். மஞ்சள் எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது. மஞ்சளிலுள்ள் குர்குமின் அழற்சி எதிர்ப்பிற்கு உதவுகிறது. குர்குமின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் மூளையின் செயல்பாடுகளையும் பாதுகாக்கவும் உதவுகிறது.

மஞ்சள் உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்கிறது, ஏனெனில் இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது, மேலும் உங்கள் உடலின் ஆக்ஸிஜனேற்ற நொதிகளையும் தூண்டுகிறது. எனவே உங்கள் ஆக்ஸிஜன் குறைப்பாட்டுக்கு மஞ்சள் அவசியம்.

இது வயிற்றில் வாயு உருவாவதையும் அஜீரண பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

மூச்சுக்குழாய் அழற்சி

மூச்சுக்குழாய் அழற்சியின் நாள்பட்ட சிக்கலை நீங்கள் அடிக்கடி அனுபவித்து வந்தால், மஞ்சளைப் பயன்படுத்தி இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். 1 தேக்கரண்டி மஞ்சள் பொடியை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகுங்கள். இதனால் கபம் உருகி, உங்கள் மூச்சுக்குழாய் நெரிசலை நீக்கும்.

புற்றுநோய் பாதுகாப்பு

மஞ்சள் புற்றுநோயைத் தடுப்பதிலும் உதவுகிறது. இரண்டு கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும். அதைக் கலக்கி, ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் நீர் கர்குமோல் மற்றும் கர்டியோன் சேர்மங்களைக் கொண்டுள்ளது. அவை சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராக வலுவான சைட்டோடாக்ஸிக் விளைவுகளைக் கொண்டுள்ளன.

மூட்டு சிக்கல்கள்

மூட்டு ஆரோக்கியத்திற்கு மஞ்சள் ஒரு அற்புதமான மசாலா ஆகும், ஏனெனில் இது மூட்டு தொடர்பான பிரச்சினைகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சுளுக்கு மற்றும் உட்புற காயங்களை போக்கவும் உதவுகிறது. இதற்கு, 2 கப் பாலில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து அதை இளங்கொதிவிட்டு சிறிது சிறிதாக ஆற விடவும். சிறந்த முடிவுகளுக்காக தினமும் காலையிலும் மாலையிலும் சூடான இந்த பானத்தை குடிக்கவும்.

தோல் பிரச்சினைகள்

சருமத்தின் வலி மற்றும் அரிப்பு நீங்க, 1 தேக்கரண்டி மஞ்சள் தூளை எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தண்ணீரில் கலந்து மென்மையான பேஸ்ட் செய்யுங்கள். ஹெர்பெஸ் புண்கள், அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோல் அழற்சி, பருக்கள் மற்றும் தொழுநோய் புண்கள் போன்றவற்றில் இதை நேரடியாக வைக்கவும். இந்த வைத்தியத்தை தவறாமல் பயன்படுத்தினால் இதுபோன்ற அனைத்து தோல் துயரங்களும் நம்மைவிட்டு விடைபெறும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health benefits of turmeric immunity vitamins