Advertisment

உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய்: இந்த உணவு முறையை முயற்சித்தீர்களா?

Health Benefits Of keto Diet: Ketogenic குறைந்த கார்போஹைட்ரேட் உணவைக் குறிக்கிறது. இது எடை குறைப்பை ஏற்படுத்தும் பானம் என்ற பெயரில் பிரபலம் அடைந்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய்: இந்த உணவு முறையை முயற்சித்தீர்களா?

Health Benefits Of keto Diet

Health News In Tamil: நீரிழிவு என்பது உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாகும். இது உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது அதிக குளுக்கோஸின் விளைவாக நிகழ்கிறது. சர்வதேச நீரிழிவு சம்மேளன அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 72 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் உள்ளார்ந்த பகுதியாகும்.

Advertisment

 ketone drink என்றால் என்ன?

Ketogenic குறைந்த கார்போஹைட்ரேட் உணவைக் குறிக்கிறது. இது எடை குறைப்பை ஏற்படுத்தும் பானம் என்ற பெயரில் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த ketone மோனோஎஸ்டர் பானம் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாகக் கூறும் புதிய உணவு முறையாகும்.

Health Benefits Of keto Diet: கீட்டோன் பானம் பயனுள்ளதா?

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஒகனகன் நடத்திய புதிய ஆய்வில், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கெட்டோஜெனிக் துணை நிற்கக் கூடும் என்றும் தெரிவிக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ஜொனாதன் லிட்டில், இரவு உணவிற்கு பிறகு 15 பேர் மீது கீட்டோன் மோனோஸ்டர் உட்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, இந்த ஆய்வை நடத்தினார்.

டீ குடிக்கிறதுல அவ்ளோ நன்மையா? ஆனா, இது வேற ‘டீ’!

கீட்டோன் சப்ளிமெண்ட் உட்கொண்ட பிறகு, 25 கிராம் சர்க்கரை கொண்ட ஒரு திரவத்தை குடிக்க சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் கேட்கப்பட்டனர். அதன்பிறகு எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில், கீட்டோன் மோனோஸ்டர் பானத்தை உட்கொண்டவர்களால் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடிந்தது என்பது தெரியவந்தது.

Little கருத்துப்படி, இந்த கீட்டோன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் நீண்டகால விளைவுகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கூடுதல் மருந்துகள் உதவக்கூடும் என்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்தும் இயற்கையான வழிகள் எப்போதும் ஒப்பீட்டளவில் குறைவான ஆபத்தானவை என்பதை மறுக்க முடியாது.

தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், கீட்டோன் மோனோஎஸ்டர் பானங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று பரிந்துரைத்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனகன் Campus கூறுகையில், மனிதர்களில் வளர்சிதை மாற்றக் கட்டுப்பாட்டை மேம்படுத்தக்கூடிய ketosis நிலையை அடைய வெளிப்புற கீட்டோன்கள் சாத்தியமாக்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஒரு Ketone பானம் உண்மையில் பருமனான மக்களில் வளர்சிதை மாற்றக் கட்டுப்பாட்டை மேம்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சி பரிந்துரைத்தது. இருப்பினும், வளர்சிதை மாற்றக் கட்டுப்பாட்டில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்த இது பாதுகாப்பாக பயன்படுத்தப்படுமா என்பதை ஆராய கூடுதல் ஆராய்ச்சி தேவை.

ஊறுகாய் ஜூஸ்… விளையாட்டு வீரர்கள் முக்கியமா இதை கவனியுங்க!

நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை முறை மாற்றங்கள்

உங்கள் அன்றாட உணவில் மாற்றங்களைக் கொண்டு வருவது நீரிழிவு நோயைச் சமாளிக்க ஒருவருக்கு உதவும்.

குறைந்த சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்ட ஆரோக்கியமான உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

பச்சை இலை காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றிலிருந்து வரும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவை நீரிழிவு நோயைக் கையாள்வதற்கும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் தரத்தை அதிகரிப்பதற்கும் சில வழிகள் ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment