Advertisment

டீ குடிக்கிறதுல அவ்ளோ நன்மையா? ஆனா, இது வேற ‘டீ’!

Weight loss Home Made Remedies: சென்னா மற்றும் சீன மல்லோ ஆகிய இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன. இரண்டும் கரையக்கூடியவை. இதில் சென்னா மலச்சிக்கலை போக்க உதவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டீ குடிக்கிறதுல அவ்ளோ நன்மையா? ஆனா, இது வேற ‘டீ’!

Weight loss Home Made Remedies

Weight loss Tamil News: நாம் அனைவரும் தினமும் உடற்கட்டுடன் அழகாக இருப்பதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடுதலாக எடையைக் குறைக்க ஏராளமான வழிகள் இருப்பது தெரியும். ஆனால், அவை எதுவும் நடைமுறையில் செய்வதற்கு எளிமையாக இருக்காது.

Advertisment

உடல் எடையைக் குறைக்க தொடங்குபவர்களுக்கு, உடற்கட்டுடன் அழகாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் சரியான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று வல்லுனர்கள் அறிவுரை கூறுகின்றனர். அதனால், நீங்கள் குழப்பமடையாமல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற திட்டத்தை மனதில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

Weight loss Home Made Remedies- உடல் எடை குறைய, பல்லேரியன் டீ

உங்கள் உடல் எடையைக் குறைக்க பல்லேரினா டீ இருக்கிறது. இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். பல்லேரினா டீ என்றா என்ன என்று யோசிக்கிறீர்களா? பல்லேரினா டீ பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உங்களுடைய ஊகம் சரிதான். இந்த டீ பல்லேரினா நடனக் கலைஞர்களிடம் இருந்துதான் இந்தப் பெயரை பெற்றுள்ளது. நீங்கள் இந்த பல்லேரினா தேநீரைக் குடித்தால், உங்களுடைய உடல் எடையை குறைக்க முடியும். அதோடு நீங்கள் ஒரு கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் நடனக் கலைஞரின் வடிவான உடற்கட்டையும் பெற முடியும். இந்த தேநீரில் உள்ள ஒரு பெரிய நன்மை என்னவென்றால், மற்ற வகை தேநீரைப் போலல்லாமல் இதில் சிறிது அளவு காஃபின் உள்ளது. நிச்சயமாக இந்த பல்லேரினா தேநீரில் முற்றிலும் காஃபின் இல்லை. மேலும், பெரிய அளவில் எடையைக் குறைப்பதற்கான மூலக் கூறுகள் உள்ளன.

காஃபின் அதிகமாக இருப்பவர்களுக்கு அமைதியின்மை, தூக்கமின்மை, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்பது அறியப்படுகிறது. எனவே இந்த பல்லேரினா தேநீர் அத்தகையவர்களுக்கு ஒரு சரியான மாற்றாகும்.

இந்த பல்லேரினா தேநீர் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். இது ஒரு இயற்கை மலமிளக்கியாகும். முதன்மையாக, இந்த தேநீரில் சென்னா மற்றும் சீன மல்லோ ஆகிய இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன. இரண்டும் கரையக்கூடியவை. இதில் சென்னா மலச்சிக்கலை போக்க உதவும்.

எடை குறைப்புக்கு இது எப்படி உதவும் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். நீங்கள் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் ஓரளவு நீர் எடையை வெளியேற்ற முயற்சிக்கும்போது, அதன் பொருட்களில் உள்ள மலமிளக்கி பண்புகள் உதவும். இது தவிர, இது ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. ஏனென்றால் இதில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை இரண்டும் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Weight Loss Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment