காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்… எப்படி சாப்பிடுவது? என்ன பயன்?

Health benefits of ghee in tamil: மஞ்சள் உடன் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து கொதிக்க வைத்த கலவையை தினமும் காலையில் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உலர் இருமலை குணப்படுத்தவும் உதவுகிறது.

Health benefits of ghee in tamil: மஞ்சள் உடன் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து கொதிக்க வைத்த கலவையை தினமும் காலையில் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உலர் இருமலை குணப்படுத்தவும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health tips in tamil: benefits of ghee in tamil

Health tips in tamil: ஆரோக்கியமான கொழுப்பாகக் கருதப்படும் பொருட்களில் நெய் - யும் ஒன்றாகும். இவற்றை சூடாக சமைத்த உணவுகளோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நெய் சிறுகுடலில் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது மற்றும் நமது இரைப்பைக் குழாயின் அமில pH ஐக் குறைக்கிறது.

Advertisment

பசுவின் நெய் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற மூலமாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைத் தடுக்கிறது.

ஆயுர்வேதத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது உடலை ரசா போல நடத்துகிறது. ரசா என்பது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஊட்டச்சத்தின் முக்கிய ஆதாரமாகும். நெய் உயிரணு புத்துணர்ச்சி செயல்முறையை மேம்படுத்துகிறது, இது உடலின் குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது என்றும் ஆயுர்வேதம்கூறுகிறது.

நெய் எடையைக் குறைக்க கூட உதவுகிறது. நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் மற்றும் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் பிடிவாதமான உடல் கொழுப்புகளைத் திரட்டவும், அவற்றை உடலில் இருந்து வெளியேற்றவும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் ஒருவர் நெய் அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

Advertisment
Advertisements
publive-image

நெய் எப்படி சாப்பிடுவது?

  • காலையில் ஒரு டீஸ்பூன் பசுவின் நெய்யை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளவும்.
  • நீங்கள் பச்சை மஞ்சள் உடன் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து கொதிக்க வைக்கலாம். இந்த கலவையை தினமும் காலையில் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உலர் இருமலை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • ஒருவர் பச்சை மஞ்சள் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய்யை அரைத்து காலை பானமாக அருந்தி வரலாம்.

"ஆயுர்வேதத்தின் படி நெய் நமது ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை வழங்குதல், நினைவாற்றலை மேம்படுத்துதல், வயதான செயல்முறையை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி நெய் நன்மை பயக்கும், ஆனால் இது செயல்பாட்டு நிலை மற்றும் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். வெற்று வயிற்றில் நெய்யின் நன்மைகள் பற்றி எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், ஆயுர்வேதத்தின் படி இந்த நடைமுறை உயிரணு புத்துணர்ச்சி மற்றும் குணப்படுத்த உதவுகிறது மற்றும் தோல் மற்றும் முடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது ”என்று பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் அனுஷ்கா பைந்தூர் கூறியுள்ளார்.

publive-image

நெய்யின் சில ஆரோக்கிய நன்மைகள்:-

  • நெய் இயற்கையாகவே மூட்டுகளை உயவூட்டுகிறது மற்றும் எலும்பு மூட்டுகளில் மசகு எண்ணெய் உருவாவதை ஊக்குவிக்கிறது.
  • இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்பட்டு சருமத்தை உள்ளே இருந்து பளபளக்க நெய் உதவுகிறது.
  • நெய் வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும் அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் நிறைந்துள்ளது. ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் இருப்பது உடல் கொழுப்பை இழக்க உதவுகிறது.
  • தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் அல்லது அதிக வேலை உங்கள் கண்களைச் சுற்றி கரும்புள்ளிகளை விட்டுவிடும். எந்த நேரத்திலும் அவற்றை குறைக்க நெய் பக்கம் திரும்பவும். நீங்கள் படுக்கைக்கு முன் கண்களைச் சுற்றி லேசாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Lifestyle Update Healthy Food Tips Healthy Food Tamil Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: