முக்கிய பிரச்னைக்கு தீர்வு: தேங்காய் தண்ணீர்… அதுவும் இத்தனை மணிக்கு குடிங்க!

home remedies for acidity problem in tamil:இரைப்பை சுரப்பிகளில் அமிலங்கள் அதிகமாக சுரக்கும் போது வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுகிறது, இது காரமான உணவுகள் அல்லது உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி காரணமாக தூண்டப்படலாம்.

home remedies for acidity problem in tamil:இரைப்பை சுரப்பிகளில் அமிலங்கள் அதிகமாக சுரக்கும் போது வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுகிறது, இது காரமான உணவுகள் அல்லது உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி காரணமாக தூண்டப்படலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health tips in tamil: foods for acidity regulators tamil

Health tips in tamil: சரியான உணவுப் பழக்கமின்மை, அதிகப்படியான உணவு உண்ணுதல் மற்றும் போதிய தூக்கமின்மை போன்றவை நமது வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன. அதில் தசைப்பிடிப்பு, உறுமல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் முக்கியவையாக குறிப்பிடப்படுகின்றன.

Advertisment

நம்முடைய மாடர்ன் வாழ்க்கை முறை பழக்கத்தில் வேலை செய்வது அவசியம் என்றாலும், நமது உடலுக்கு உதவக்கூடிய சில உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். மேலும், குடலில் அமிலத்தன்மை ஏற்படுவதை தவிர்க்க ஒருவர் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆயுர்வேத பயிற்சியாளர் ஜூஹி கபூர் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடபட அவர் சில உணவுகளை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.

publive-image

"பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அமிலத்தன்மை என்பது மோசமான வாழ்க்கை முறையின் ஒரு துணைப் பொருளாகும். நீங்கள் தாமதமாக தூங்க விரும்பினால், ஒற்றைப்படை நேரத்தில் சாப்பிடுங்கள். பெரும்பாலான உணவுகளை நீங்கள் அதிகமாக சாப்பிடும் போது நீங்கள் நிச்சயமாக ஆன்டாக்சிட்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள், ”என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

அமிலத்தன்மை என்றால் என்ன?

இரைப்பை சுரப்பிகளில் அமிலங்கள் அதிகமாக சுரக்கும் போது வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுகிறது, இது காரமான உணவுகள் அல்லது உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி காரணமாக தூண்டப்படலாம்.

அமிலத்தன்மையை வெல்ல மூன்று உணவுகள்:-

வாழைப்பழம்:

வாழைப்பழத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். அது "உங்கள் அரை அமிலத்தன்மை கவலைகளை தீர்க்கும்"

சப்ஜா விதைகள்

ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி சப்ஜா விதைகளை ஊறவைக்கவும். சப்ஜா விதைகள் இயற்கையில் குளிர்ச்சியடைகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். "மாதவிடாய் காலத்தில் அல்லது உங்களுக்கு சளி/இருமல் இருந்தால் அதைத் தவிர்க்கவும்" என்று கபூர் கூறியுள்ளார்.

தேங்காய் நீர்:

இந்த அதிசய பானத்தை காலை 11 மணிக்கு பருகி வந்தால் உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மை அப்படியே ஓடி விடும்.

அமிலத்தன்மையைத் தவிர்க்க சில வாழ்க்கை முறை மாற்றங்கள் இங்கே:-

*சிறிய மற்றும் அடிக்கடி உணவை உண்ணுங்கள்
*அதிகப்படியான புரதத்தைத் தவிர்க்கவும்
*ஒவ்வொரு வாரமும் 2-3 அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள், அதிகமாக இல்லை.
*உங்கள் உணவில் தானியங்களை தவிர்க்க வேண்டாம்
*உணவுக்குப் பிறகு 100 அடிகள் நடக்க வேண்டும்
*வஜ்ராசனத்தில் அமருங்கள்
*நேர்மறை, மகிழ்ச்சியான எண்ணங்களை சிந்தியுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: