தினமும் 3- 6 டீஸ்பூன் நெய் தேவை: எந்த உணவில் எவ்வளவு சேர்க்கலாம்?

ghee consumption in tamil: ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-6 தேக்கரண்டி நெய் சேர்க்காலம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஒரு தேக்கரண்டி நெய் நல்லது.

Health tips in tamil: How much ghee should you add to your food? In tamil

Health benefits and consumption of ghee in tamil: வெண்ணெய் அல்லது நெய்யைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து உள்ளது. இது ஒருபுறமிருக்க, நம்மில் பலர் விரும்பும் உணவுப்பொருட்களில் நெய் முக்கிய பொருளாக உள்ளது. எனினும், சிலர் எடை அதிகரிப்பு காரணமாக தவிர்த்துவருவதை நாம் பார்க்க முடிகிறது.

நெய்யின் உண்மையான ஆரோக்கிய பயன்கள் அதன் அளவில் தான் உள்ளது. மேலும் அவற்றை நாம் எந்தெந்த உணவுகளில் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இது குறித்து மேலும் அவர் தனது இன்ஸ்டா பதிவில் “நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதன் அடிப்படையில், விகிதாசார அளவு நெய் சேர்க்க வேண்டும். நச்னி அல்லது ராகி போன்ற தினைக்கு, நீங்கள் பருப்பு மற்றும் அரிசியில் சேர்ப்பதை விட இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு அதிகம் நெய் சேர்க்க வேண்டும்?

ஒரு உணவின் சுவையை அதிகரிக்க நெய் போதுமானது. ஆனால் உணவின் சுவையை மறைக்கும் அளவுக்கு நெய் சேர்க்க கூடாது என நெய் நுகர்வு பற்றி அந்த வீடியோவில் பேசியுள்ள திவேகர், “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது, இந்த தகவல் எங்கள் கூட்டு உணவு ஞானத்தின் ஒரு பகுதியாகும். தால்-அரிசி, கிச்சடி, ரொட்டி-சப்ஜி போன்ற உணவுகளுக்கு பூரான் போலி, தால் பாடி, பஜ்ரா ரொட்டி போன்றவற்றுடன் ஒப்பிடும்போது குறைவான நெய் தேவைப்படும்.” என்று கூறியுள்ளார்.

“நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமான பல வைட்டமின்கள் நிறைந்த ஒன்றாக நெய் உள்ளது. ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் ஒரு முறையாவது நெய் சேர்க்கப்பட வேண்டும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-6 தேக்கரண்டி நெய் சேர்க்காலம். முக்கிய விஷயம் என்னவென்றால், நெய் உணவின் சுவையை அதிகரிக்க வேண்டும், அதை மறைக்கக்கூடாது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஒரு தேக்கரண்டி நெய் நல்லது.” என்று மேலும் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health tips in tamil how much ghee should you add to your food in tamil

Next Story
எடை குறைப்பு… இந்த 5 பழங்களை மிஸ் பண்ணாதீங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X