சப்போட்டா ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இவ்வளவு இருக்கிறதா? சூப்பர் ஜூஸ் செய்வது எப்படி?
sappotta juice in tamil: சப்போட்டா பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது.
Healthy drinks Tamil News: 'சிக்கு' என்று அழைக்கப்டும் இந்த சிறிய சப்போட்டா பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள். இந்த பழத்திற்கு சப்போட்டா என பெயர் காரணம் வர, இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு சப்போட்டாக உள்ளது, எனவே தான் சப்போட்டா என அழைக்கிறோம் என ஒரு சாரார் குறிப்பிடுகிறார்கள்.
Advertisment
அவர்கள் கூறுவது போல இந்த சுவையான பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இந்த சப்போட்டா பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. மேலே கூறியது போல், இந்த பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது. அதனுடைய சர்க்கரை சுவை காரணமாக, பரவலாக மில்க் ஷேக்கில் பயன்படுத்தப்படுகிறது.
சப்போட்டா ஜூஸ் பயன்கள்
கண்களுக்கு நல்லது ஆற்றலுக்கு ஆதாரமானது அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட் குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை தடுத்தல் ஆரோக்கியமான எலும்புகள் மலச்சிக்கல் நிவாரணம் கர்ப்பக் காலத்தின் போது ஏற்படும் நன்மைகள் கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வயிற்றுப்போக்குக்கான மருந்து மன நலம் சளி மற்றும் இருமல் சிறுநீரக கற்கள் எடை இழப்புக்கு உதவுகிறது நச்சு நீக்கி பொருளாக இருக்கிறது பல் சொத்தைக் குழிகள் பொலிவான சருமம் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இப்படி ஏராளமான ஆரோக்கிய நண
Advertisment
Advertisement
சப்போட்டா ஜூஸ் செய்யத் தேவையான பொருட்கள்
சப்போட்டா - 5 காயவைத்த பால் - 3 டம்ளர் சர்க்கரை - தேவையான அளவு
சப்போட்டா ஜூஸ் செய்முறை
முதலில் சப்போட்டாகளை எடுத்து அதன் தோல் மாற்று விதைளை நீக்கி விட்டு ஒரு மிக்சியில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் அவற்றோடு பால் சேர்த்து அரைத்து டம்ளரில் பரிமாறவும்.
இப்போது சப்போட்டா ஜூஸ் தயாராக இருக்கும் அவற்றை பருகி மகிழவும்.