நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்!

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Healthy Dry fruits and Nuts Snacks for your healthy diet and fitness

Healthy Dry fruits and Nuts Snacks for your healthy diet and fitness : நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். பாதாம், வால்நட் , வேர் கடலை என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, ஆற்றல் கிடைக்க நாம் நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.

நட்ஸ் நல்லது என்பதைக் கேள்விப்பட்டு, ஒரே நாளில் நூறு கிராம் நட்ஸ் உண்பதும், பிறகு ஒரு மாதத்துக்கு நட்ஸ் சாப்பிடாமல் இருப்பதும் நல்லது அல்ல. “தினமும் 20 கிராம் அளவுக்குச் சீராக நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது” என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஒரே நட்ஸ் வகையை மட்டும் 20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாகச் சேர்த்து, 20 கிராம் தினமும் சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.

1) பாதாம் – 4 முதல் 7 (எண்ணிக்கையில்)

பாதாம் பருப்புகள், சர்க்கரை நோயாளிகளுக்கு குல்கோஸ் அளவை சரியான அளவில் வைக்க உதவும். இது ஒருநாளின் தேவையான மெக்னிஷ்யம் அளவை கொடுக்க உதவும். இதை இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது.

நரம்பு மண்டலத்தை காக்கும் நியாஸின் உப்பும் இதில் அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் போதுமான அளவு உள்ளது. எனவே இதய நோயாளிகளும், பசி பொறுக்க முடியாதவர்களும் தினமும் பத்து பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்.

கொழுப்பு சத்து அதிகமுள்ள பாதாம் பருப்பு இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நல்ல கொலஸ்ட்ராலை அளவுடன் வைக்க உதவுகிறது.

பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் பாஸ்பரஸ் உப்பு கால்சியத்தை விட இரு ந்\மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது.

பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளதால் மெலிவுற்ற பெண்கள் எலும்பு மெலிவு நோயில் விழுந்து விடாமல் பாதுகாக்கும்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது,
குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது.

2) வால்நட் – 3 முதல் 5 (எண்ணிக்கையில்)

வால்நட்ஸில் கலோரிகள் அதிகளவில் உள்ளது. ஆனால் இதனால் உடல் எடை அதிகரிக்காது. தவிர இது இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது. இதை தோளோடு சாப்பிடுவது சிறந்தது.

ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் நீதியான பல நோகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மூளை செயல்பாடு வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

வால்நட்ஸில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்துக்களுடன், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவைகளும் அடங்கியுள்ளன. அதோடு வால்நட்ஸில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

3) வேர்கடலை:

புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் வேர்கடலையில் அதிகளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால், உடல் எடை குறைய உதவுவதுடன், இதய நோய் வரும் ஆபத்தையும் குறைக்கிறது. தினமும் 28-30 வேர்கடலைகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க : தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy dry fruits and nuts snacks for your healthy diet and fitness

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express