அனைத்து நேரத்திலும் பழங்கள் உண்ணக்கூடாது! என்னென்ன பழங்கள் எப்போது உண்டால் உடலுக்கு நல்லது ?

Healthy Diet : பழங்களை எப்போதும் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்காது.

Fruits intake, Time to eat fruits, health tips, weight loss tips, healthy life, Healthy fruits
Fruits intake, Time to eat fruits, health tips, weight loss tips, healthy life, Healthy fruits

Healthy Food Diet Tips : Time To eat Fruits சர்க்கரை நிறைந்த பழங்கள் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்பதால் தூங்க போகும்முன் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அல்லது 2,3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பதால் மட்டுமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் பழங்கள், காய்கறிகளில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை இருப்பதால் தினமும் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பழங்களை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?
உணவு சாப்பிட்ட பின் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த பழங்கள் உணவை நொதிக்க செய்யும் என்பதால், பழங்களை எப்போதும் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்காது. அல்லது சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிடலாம்.

காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்த பின் பழங்களை சாப்பிடலாம். காலை வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். அத்துடன் உடல் எடை குறைத்து, உடல் ஆரோக்கியம் பெறும். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் மற்றும் மாலை வேளையில் சாப்பிடலாம். மதிய உணவிற்கு முன் பழங்கள் சாப்பிடுவதால் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

அதேபோல சர்க்கரை சத்து நிறைந்த பழங்கள் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும். பழங்கள் ஆரோக்கியமானது தான் என்றாலும், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வதால் அதிகபடியான பயன்களை பெறலாம்.

மேலும் படிக்க : நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள்!

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food diet tips when you should eat fruits

Next Story
International Yoga Day 2019: முதன்முறையாக யோகா செய்ய போறீர்களா? ஜஸ்ட் வெயிட் இதை படிச்சிட்டு போங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com