எடை குறைப்பு… இளமைத் தோற்றம்… எள்ளு மேஜிக்! இப்படி பயன்படுத்துங்க!

benefits of Sesame seeds tamil news: கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக காணப்படுகிறது. அதே வேளையில் வெள்ளை மற்றும் சிவப்பு எள்களில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது.

Healthy food news in tamil benefits of Sesame seed laddoos
Healthy food news in tamil benefits of Sesame seed laddoos

Healthy food news in tamil:  எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பொருள்களில் ஒன்றாக எள் உள்ளது. எள்ளில் பல வகை உள்ளது. ஆனால் நாம் அதிகமாக பயன்படுத்துவது கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் தான். கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக காணப்படுகிறது. அதே வேளையில் வெள்ளை மற்றும் சிவப்பு எள்களில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. நம்மில் பலருக்கு வெறுமனே வறுத்த எள்ளை கொடுத்தால் சாப்பிட மாட்டோம். ஆனால் அந்த வறுத்த எள்ளில் சிறிது வெல்லக்கட்டி பாகு சேர்த்து லட்டு போன்ற உருண்டைகளாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவோம்.

நம்மில் பலர் எள் உருண்டைகளில் உள்ள பலன்கள் தெரியாமலே விரும்பி சாப்பிட்டு வருகிறோம். அவற்றின் பலன்கள் தான் என்ன? அவை உடலுக்கு எந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி சந்தோஷியரோகியம் டயட் இ க்கிளினிக்கின் டயட்டீஷியன் அபூர்வா சைனி மற்றும் ஜெய்பி மருத்துவமனையின் பேரியாட்ரிக் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் சாக்ஷி சோப்ரா சுருக்கமாக விளக்கியுள்ளனர்.

எள்ளின் பயன்கள்

* எள் உருண்டைகளை சாப்பிடுவதால் உடலின் எடையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் அவற்றில் கொழுப்பை இழைக்கும் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. அதோடு உங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

* எள்ளில் துத்தநாகம் நிறைந்து காணப்படுவதால், உடலில் கொலாஜன் கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது. மற்றும் தோல் சுருக்கத்தில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

* மாதவிடாய் பிந்தைய பெண்களுக்கு எள் நல்லது. ஏனெனில் அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் சமப்படுத்துகின்றன.

* எள்ளில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மற்றும் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* எள் உருண்டைகளில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இரத்தக் கொழுப்பை மேம்படுத்துவதோடு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* நீங்கள் ஆரோக்கியமான கொழுப்பு விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், அதற்கு எள் உருண்டைகளை தேர்வு செய்யலாம்.

“எள்ளுடன் வெல்லம் சேர்த்து இருப்பதால் எள் உருண்டையில் காணப்படும் இரும்புச்சத்து அதிகரித்துள்ளது. இது இரத்த சோகை உள்ள பெண்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் மற்றும் இளம் வயதில் உள்ள பெண்களுக்கும் நன்மை பயக்கும்” என்று மருத்துவர் சோப்ரா தெரிவித்துள்ளார்.

* செம்பு போன்று காணப்படும் எள்ளில் இருக்கும் மைக்ரோ-ஊட்டச்சத்துக்கள் முடக்கு மற்றும் கீல்வாதத்திற்கு நல்லது. அவற்றில் கால்சியம் நிரம்பி காணப்டுகின்றன. மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயாளிகள் இதை கண்டிப்பாக சாப்பிடலாம்.

கருப்பு மற்றும் வெள்ளை எள் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலவையைக் கொண்டிருந்தாலும், கருப்பு எள்ளானது நார்ச்சத்து ஒரு படி அதிகமாகவே உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food news in tamil benefits of sesame seed laddoos

Next Story
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com