ஜீரண சக்தி, கண் பார்வை… நெல்லிக்காயில் முழு நன்மை பெற இப்படிச் சாப்பிடுங்க!

health benefits of Amla Tamil news: நெல்லிக்கனி முடி உதிர்தல், செரிமானம் மற்றும் கண்பார்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க வல்லதாக உள்ளது.

Healthy food news in tamil how to consume amla and health benefits of Amla
Healthy food news in tamil how to consume amla and health benefits of Amla

Healthy food news in tamil: இந்தியாவில் விளையும் காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் நன்மைக்கான சக்தியாக அறியப்பட்டு வருகின்றன. அவை ஆரோக்கியமானவையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. அத்தகைய பழ வகைகளில் ஒன்றுதான் அவ்வை பிராட்டியார் அதிமானுக்கு கொடுத்த நெல்லி கனி.

இந்த நெல்லிக்கனி முடி உதிர்தல், செரிமானம் மற்றும் கண்பார்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க வல்லதாக உள்ளது. அப்படிப்பட்ட நெல்லிக்கனியை பல வழிகளில் உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை அன்றாட உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது என்பது பற்றி ஆயுர்வேத பயிற்சியாளர் மருத்துவர் டிக்சா பாவ்சர் இங்கு சில வழிமுறைகளை பகிர்ந்துள்ளார்.

நெல்லி குளிர்காலத்தில் ஒரு பருவகால பழங்களில் ஒன்றாகும். எனவே இதை ஒருவர் பச்சையாகவோ, ஊறுகாய்களாகவோ, உலர்ந்த தூளாகவோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு பெர்ரி கலவையாகவோ உட்கொள்ளலாம். அவ்வாறு உண்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு மூல பானமாக, வெல்லத்துடன் சேர்த்து பருகி வரலாம். நெல்லி முராபாவாகவோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனி தூள்:

காலையில் 1 டீஸ்பூன் நெல்லிக்கனி தூளை வெறும் வயிற்றில், ஒரு டீஸ்பூன் தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்கனி சாறு:

20 மில்லி நெல்லிக்கனி சாற்றை வெதுவெதுப்பான நீரில் காலையில் எடுத்துக் கொள்ளலாம்.

சியவன்ப்ராஷ்:

சியவன்பிரஷின் முக்கிய மூலப்பொருள் நெல்லிக்கனி ஆகும். எனவே நீங்கள் ஒரு டீஸ்பூன் சியாவன்ப்ராஷை காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரண்டு மணி நேர உணவுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்கனி முராபா மற்றும் ஊறுகாய்:

“இந்த குளிர்காலத்தில் சந்தையில் கிடைக்கும் புதிய நெல்லிக்கனியை முராபாவாகவோ அல்லது ஊறுகாயகவோ தயாரித்து தினமும் உங்கள் உணவோடு சேர்த்து உண்ணலாம்” என்று மருத்துவர் டிக்சா பாவ்சர் கூறியுள்ளார்.

புளித்த பழம்:

நீங்கள் நெல்லிக்கனியை ஊற வைத்து, ஒவ்வொரு நாளும் ஒன்று-இரண்டு சாப்பிடலாம்.

நெல்லிக்கனி மிட்டாய்:

நீங்கள் நெல்லிக்கனியை துண்டுகளாக வெட்டி சூரிய வெளிச்சத்தில் உலர வைக்கலாம். அவை போதுமான அளவு காய்ந்தவுடன், அவற்றை சேமித்து தினமும் மிட்டாய்களாக செய்து உண்ணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Healthy food news in tamil how to consume amla and health benefits of amla

Next Story
வெண்டைக்காய் புளி குழம்பு.. டேஸ்டில் அடிச்சிக்க முடியாது!vendakkai puli kozhambu recipe vendakkai recipes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express