Advertisment

தினமும் காலையில் வெந்தயம், எலுமிச்சை: எவ்ளோ நன்மைனு பாருங்க!

Health benefits of fenugreek seeds and lemon water Tamil News: வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறின் ஆரோக்கியமான நன்மைகளை பற்றி இங்கு காண்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy food Tamil News: health benefits of fenugreek seeds and lemon water

Healthy food Tamil News: "ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தய விதைகளுடன் ஒரு கிளாஸ் சூடான எலுமிச்சை சாறு பருக வேண்டும். அவை உடலின் செரிமானத்தை மேம்படுத்தவும், எடை குறைக்கவும் உதவும். மேலும் உடலுக்கு ஒரு சிறந்த நச்சுத்தன்மை எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படும்" என்று பிரபல சமையல் வல்லுநர் சஞ்சீவ் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவுறுத்தியுள்ளார். 

Advertisment

சமையல் வல்லுநர் சஞ்சீவ் கூறுவது போல வெந்தயம் மற்றும் எலுமிச்சை பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய மூலிகை பொருளாக உள்ளன. மேலும் இவை இரண்டுமே உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரும் பொருளாகவும் உள்ளன. இவற்றின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு சுருக்கமாக காணலாம். 

எலுமிச்சை சாறின் ஆரோக்கிய நன்மைகள்

எலுமிச்சை சாறில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. எலுமிச்சை வைட்டமின் சி என்ற மூல பொருளை கொண்டுள்ளது. இவை ஆக்ஸிஜனேற்றியாகவும், வறண்ட சருமம் மற்றும் தோல் பாதிப்புக்கும் உதவுகிறன. மேலும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இது தவிர, காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறை பருகி வந்தால், அவை மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலுக்கு உதவுகிறது. சிட்ரிக் அமிலத்தின் கூறுகளை கொண்டுள்ள எலுமிச்சை சிறிய சிறுநீரக கற்களை உடைக்க உதவுகின்றது. மேலும் அவை உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கின்றன.

வெந்தயம் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்

வெந்தயம் அல்லது மெதி என்று அறியப்படும் இந்த விதையில் உள்ள புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. இவை ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆண்டிடியாபெடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாகவும்  அறியப்படுகிறது. 

வெந்தயம் மலச்சிக்கலை நீக்குவதோடு, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Lifestyle Healthy Life Health Tips Healthy Food Fenugreek Seeds Benefits Of Fenugreek Seeds Lemon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment