Advertisment

எடை குறைப்பு, ஜீரணசக்தி... இஞ்சியில் ஏராள நன்மைகள்; பயன்படுத்துவது எப்படி?

Health benefits of ginger Tamil News: இஞ்சியின் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு காண்போம்.

author-image
WebDesk
New Update
Healthy food Tamil News health benefits of ginger

Healthy food Tamil News: நீங்கள் டீ விரும்பியாக இருந்தால், கண்டிப்பாக இஞ்சி டீ குடிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் இஞ்சி டீ- யும் ஒன்று என்றால் மறுக்க முடியாது. இது உங்கள் ஸ்ட்ரெஸ்களை தளர்த்துவதோடு, உற்சாகப்படுத்துகிறது. மேலும் இஞ்சிக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் அறியப்படுகிறது.

Advertisment

சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இஞ்சி அதிக அளவு இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் என்றும், நீண்டகால நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். "புடெரிம் இஞ்சியிலிருந்து பெறப்பட்ட இஞ்சி சாறுகள், இன்சுலினிலிருந்து சுயாதீனமாக தசை செல்களில் குளுக்கோஸ் அதிகரிப்பதை அதிகரிக்க முடிந்தது" என்று அந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மருந்து வேதியியல் பேராசிரியர் பசில் ரூஃபோகலிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஞ்சியின் சில ஆரோக்கிய நன்மைகளை இங்கு வழங்கியுளோம்.

செரிமானத்தை அதிகரிக்கிறது

இஞ்சி செரிமானத்தை ஊக்குவிக்கிறது, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என்று கடந்த கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது முழுமையின் உணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் குடல் தொடர்பான வீக்கத்திற்கு உதவுகிறது. மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

குமட்டலை நீக்குகிறது

நீங்கள் குமட்டலால் அவதிப்பட்டால், மூல இஞ்சியின் ஒரு பகுதியை மென்று சாப்பிடுவது நன்மை பயக்கும். மேலும், பயணத்திற்கு முன் ஒரு கப் இஞ்சி தேநீர் குடிப்பதால், நோய் தொடர்பான குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்க உதவும்.

சளி மற்றும் காய்ச்சலுடன் போராட உதவுகிறது

இஞ்சி ஒரு டயாபோரெடிக் ஆகும். அதாவது இது வியர்வையை ஊக்குவிக்கிறது மற்றும் உடலின் உள்ளே சூடாக மாற்றுகிறது. குளிரால் அவதிப்படுகையில், இஞ்சி பெரிதும் உதவக்கூடும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

இஞ்சி தேநீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இருதய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகின்றான. மற்றும் இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும் மேம்படுத்தவும் உதவுகின்றன.

இஞ்சி தமனிகளில் கொழுப்பு தேங்குவதைத் தடுப்பதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது.

மாதவிடாய் பிடிப்பை நீக்குகிறது

மாதவிடாய் பிடிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இஞ்சி மிகவும் உதவுகிறது. ஒரு துண்டை எடுத்து சூடான இஞ்சி நீரில் ஊற வைத்து, அதை உங்கள் அடிவயிற்றில் தடவவும். இது வலியைக் குறைக்கவும், தசைகளை தளர்த்தவும் உதவுகிறது. அதே நேரத்தில், ஒரு கப் இஞ்சி டீயை தேனுடன் சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " ( https://t.me/ietamil )

Lifestyle Healthy Life Health Tips Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment