Healthy food Tamil News: நம்முடைய நுரையீரலை கவனித்துக்கொள்வது முன்னெப்போதையும் விட முக்கியமான ஒன்றாக இந்த தருணத்தில் உள்ளது. அழற்சி உணவுகள், சிகரெட் புகை மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் அதிகம் உள்ள உணவு நுரையீரலை சேதப்படுத்தும். ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு ஒரு சிலருக்கு நுரையீரலை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவது உங்கள் நுரையீரலைப் பாதுகாக்கவும் நுரையீரல் பாதிப்பைக் குறைக்கவும் உதவும்.
இப்போது, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகளைப் பற்றி இங்கு காண்போம்.
- ஆப்பிள்
ஆப்பிள்களை தவறாமல் சாப்பிடுவது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி இதற்கு காரணமாக இருக்கலாம்.
- மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது நுரையீரல் செயல்பாட்டை ஆதரிக்க பயனுள்ளதாக இருக்கும்.
- மூலிகை தேநீர்
இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, தேன் அல்லது இலவங்கப்பட்டை போன்ற மூலிகையால் தாயார் செய்யப்பட்ட தேநீர் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த நன்மை பயக்கும். மேலும், கிரீன் டீயில் கேடசின்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை நுரையீரல் செயல்பாட்டிற்கு பயனளிக்கும்.
- சிவப்பு முட்டைக்கோஸ்
அந்தோசயினின்கள் தாவர நிறமிகளாகும், அவை சிவப்பு முட்டைக்கோசுக்கு அதன் ஆழமான நிறத்தைக் கொடுக்கும். அந்தோசயின்கள் நுரையீரல் செயல்பாட்டில் சரிவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
- ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் ஆஸ்துமா போன்ற சுவாச நிலைமைகளிலிருந்து பாதுகாக்க உதவும்.
- பிரேசில் பருப்புகள்
இந்த பருப்பு வகைகள் செலினியம் நிறைந்த ஒரு மூலமாக செயல்படுகின்றன. இது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சுவாச மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் கண்டறியப்பட்டுள்ளது.
- பயறு வகைகள்
மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை பயறு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை நுரையீரல் செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)